கோயம்பேடு பழம் காய் பூ வியாபாரிகள் வேறு இடத்தை ஏற்கமாட்டோம் - தீர்மானம் நிறைவேற்றியது
இன்று காலை 8 மணியளவில் அனைத்து சங்கங்களின் அவசரக் கூட்டம் சென்னை பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி அறிவித்தப்படி மாற்று இடத்தில் வியாபாரம் செய்வது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அதோடு பொதுமக்கள் வருகை, அதிகமான வாகன நெரிசல் போன்றவற்றிற்கு கட்டுபாடில்லாத காய்கறி வர்த்தக முறையே காரணமாகும்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பழ வியாபாரம் முடங்கிய நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் இடமாற்றத்தால் ஆட்பற்றாக்குறை, போக்குவரத்து இடையூறுகள், மீதமாகும் பழங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை கஷ்டங்கள் அதிகரிக்குமே தவிர எந்த வகையிலும் வியாபாரிகளுக்கு பலனளிக்காது.
எனவே இடமாற்றத்தை ஏற்க மறுத்து, அரசின் மறு உத்தரவு வரும் வரை காலவரையன்றி கோயம்பேடு பழ மார்க்கெட்டை மூடுவதென அனைத்து சங்கங்களின் சார்பில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment