கொரோனா பாதிப்பு நேரத்தில் அரிய செயல்களில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பத்ரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு பாராட்டுக்குள்,நன்றி - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரிய செயல்களில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பத்ரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு பாராட்டுக்குள்,நன்றி - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி

Share This

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரிய செயல்களில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பத்ரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு  பாராட்டுக்குள்,நன்றி - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி                    
—————— —————— —————— ——————
          
கொரோனா தொற்று உலகையே உலுக்கிக் கொண்டு, நம் நாட்டிலும் பேரதிர்ச்சியையும் சொல்லொணா  நெருக்கடியையும் உண்டாக்கிக் கொண்டிருக்கும்   இவ்வேளையில் பொதுமக்களை பாதுகாக்கவும் நாட்டின் நலன் கருதியும் உடனுக்குடன் செய்திகள் வெளிவருவதை நாள்தோறும் கண்ணுற்று வருகின்றோம். பொதுமக்கள் மத்தியில் அவ்வப்போது விழிப்புணர்ச்சியையும் கட்டுப்பாட்டின்அவசியத்தையும் எடுத்துரைத்து எச்சரிக்கைப்படுத்தி வருவது காலத்தினாற் செய்யும் செயற்கரிய பெரும்பணியாகும்.                      
         
"உயிர் காப்பான் தோழன்" என்பதற்கிணங்க மக்களையும் நாட்டையும் காக்க உற்ற நண்பராக செய்திகளை வழங்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், செய்தியாளர்கள் (நிருபர்கள்) உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுதழையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடி கால பணியே சாலச்சிறந்தது. போற்றுதலுக்குரியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages