பா.ம.க, வ.ச, ச.மு.ச உள்ளிட்ட அனைத்து சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள் ஆகிய அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் - ஜி. கே. மணி
—————— —————— —————— ——————
நீங்கள் அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து உழைத்து வருவதை, சோதனை காலங்களிலும் உற்ற தூணாய் நின்று உணர்வுமிக்க பலத்தோடு, துவண்டுவிடாமல் அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றி வருவதை நாளும் கண்ணுற்று வருபவன். ஒவ்வொருவரையும் அறிந்தவன். உங்களின் ஒவ்வொருவரின் ஈடு இணையற்ற, எவ்வித எதிர்பார்ப்புமற்ற உழைப்பு தான் நமது இயக்க வளர்ச்சி.
இவ்வளர்ச்சி வேகத்திற்கு இடையில் கொரோனா என்னும் கொடிய தொற்று உலகையே உலுக்கி கோரத்தாண்டமாடிக்கொண்டு,நம் இந்திய நாட்டிலும், தமிழ்நாட்டிலும் அதிவேகமாக பரவி பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையையும், சொல்லலாணா நெருக்கடியையும், பெரும் அபாயத்தையும் கக்கிக்கொண்டிருக்கிறது.
இப்பேராபத்துக் காலத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம். உங்கள் பகுதி பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க எடுத்துச் சொல்ல வேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும் மிக மிக முக்கியமானவர்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிக மிக முக்கியமானவர்கள். நீங்கள் பாதுகாப்பாக நலமுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆழ்மனதின் விருப்பம். எனவே யாரும் வெளியில் செல்லாதீர்கள். கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். மனந்தளராதீர்கள். தன்னம்பிக்கையோடு இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
யார் மீது வந்து தாக்கலாம். கண்ணுக்குத் தெரியமால் தாக்கலாம் என தாவிக் கொண்டிருக்கின்ற கொரோனாவை எதிர்க்கும் போர்க்களத்தில் கொரில்லாப் போர்வீரர்களாய் வெற்றி பெற பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும்.
மனிதர்களை தேடி அலைந்து விட்டு, தனக்குயாரும் தாக்குதலுக்கு அகப்படவில்லை,தாவிப் பாய யாரும் கிடைக்கவுமில்லை என கொரோனா கொடியவன் வெளியேறுவான். அதன் பின்னர் சக்திப்போம். பொறுத்திருப்போம். குடும்பத்தை காத்திருங்கள். மறவாதீர்கள், மறவாதீர்கள். உங்கள் சகோதரனின் அன்பு வேண்டுகோள்.
மருத்துவர் அய்யா தலையில், மருத்துவர் அன்புமணி M.P முன்னிலையில் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்க, பாசத்தோடு பேச நாங்கள் காத்திருக்கின்றோம். அந்நாள் வெகுவிரைவில் வரும். சந்திப்போம். உங்கள் அன்பையும் பாசத்தையும் என்றும் மறவாத உங்கள் சகோதரன்-ஜி. கே. மணி
Home
அண்மை செய்திகள்
பா.ம.க, வ.ச, ச.மு.ச உள்ளிட்ட அனைத்து சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள் ஆகிய அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் - ஜி. கே. மணி
பா.ம.க, வ.ச, ச.மு.ச உள்ளிட்ட அனைத்து சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள் ஆகிய அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் - ஜி. கே. மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment