அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சென்னையில் 20 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 72.28க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 65.71க்கும் விற்பனை.

*‘உலகளவில் கொரோனா உயிரிழப்பு
62,444 ஆயிரத்தை தாண்டியது’

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரிப்பு. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,000 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை14,690
ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை11,744
அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை7,406
பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 708 பேர் உயிரிழப்பு!:
கொரோனா பலி எண்ணிக்கை பிரிட்டனில் 4,313ஆக அதிகரித்தது.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரிப்பு:

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேருக்கு  டில்லியில் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*தமிழகம் முழுவதும் 29 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
7,23,491 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு. - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

*புதுக்கோட்டை குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் அதிர்ச்சி சம்பவம். மது கிடைக்காததால் ராஜா, அருண், அன்வர் ஆகிய 3 பேர் சேவிங் லோசனை குடித்தனர்.

மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி ராஜா, அருண் ஆகிய 2 பேர் உயிரிழப்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கியில் தனியார் மருத்துவமனையில் அன்வருக்கு சிகிச்சை.

*கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு. பாகல்கோட் பகுதியில் ஒருவர் உயிரிழந்ததால் கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

*திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபானங்கள் திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது.
குமிடிப்பூண்டிஅருகே நாகராஜ் கண்டிகை பகுதியில் திருட்டில் ஈடுபட்ட அண்ணன் ரமேஷ்,தம்பி வேலு கைது.

*விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி; மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 52 வயதான நபர்  உயிரிழப்பு.

*தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்.

அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும்- தமிழ்நாடு மின்சார வாரியம்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மின்சார வாரியம் அட்வைஸ்.

*திமுக தலைவர் ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் நலம் விசாரிப்பு.

கொரனோ பரவி வரும் சூழலில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக் கொண்டதாக தகவல். திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - சோனியா காந்தி

சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். கொரோனா  சூழலிலிருந்து நாட்டு மக்கள் விரைவில் மீள்வார்கள் என இருவரும் நம்பிக்கை.

*தமிழகத்தில் கொரனாவிற்கு 2வது உயிரிழப்பு. கொரனா நோய் தொற்றால் பாதிப்பப்பட்ட நபர் விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

*கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு.

*தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 58,440 வழக்குகள் பதிவு - தமிழக காவல்துறை. 8,945 வாகனங்கள் பறிமுதல் - ரூ.18.29 லட்சம் அபராதம் வசூல் - காவல்துறை.

*டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு கொரோனா  இல்லாத ஆண் குழந்தை பிறந்தது. தந்தை,தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத குழந்தை பிறந்தது.

*குடும்ப அட்டை இல்லாத 3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி - தமிழக அரசு அறிவிப்பு. 4,022 பேருக்கு தலா 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

*நாளை மெழுகுவர்த்தி, அகல் விளக்கை ஏற்றும் முன் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம். கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவிவிட்டு விளக்கேற்ற வேண்டும் -  இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

*சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு: மார்ச் 24ல் இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னை வந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்:
இண்டிகோ 6E-2403, ஏர் ஏசியா I5-765 விமானங்களில் வந்தவர்களா நீங்கள்?.

28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல். கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுகவும்.
மார்ச் 24ல் டெல்லியிலிருந்து சென்னைக்கு மாலை 6.25 மணிக்கு வந்த விமான பயணிகளுக்கு எச்சரிக்கை

*கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் - கெஜ்ரிவால்:டெல்லி நிஜாமுதின் பகுதியின் மர்கஸ் கட்டடத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட 2,300 பேரில் 500 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 1,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

அனைவரையும் பரிசோதித்து வருகிறோம், அடுத்த 2,3 தினங்களில் சோதனை முடிவுகள் வந்துவிடும், இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

*தேனியில் உயிரிழந்த பெண் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவரின் மனைவி- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்.

*தமிழக சுகாதாரத்துறை செயலாளரை பீலா ராஜேஷுக்கு பாராட்டு தெரிவித்து ப.சிதம்பரம் ட்வீட்!.

*தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் 53 வயது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்- சுகாதாரத்துறை.

*மதியம் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்ப முடியும்.
தமிழக அரசு உத்தரவின்படி பெட்ரோல் பங்க்குகள் நாளை முதல் காலை 6 - மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் - பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages