அக்னிப்புரட்சி கொரோனா இன்றைய காலை செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி கொரோனா இன்றைய காலை செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி கொரோனா இன்றைய காலை செய்திகள்

*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 21 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

*உலகம் முழுக்க 12,01,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை14,690

*உலகம் முழுக்க 64,691 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

*ஒரே நாளில் அமெரிக்காவில் 1,048 பேர், பிரான்சில் 1,053 பேர் பலி.

*அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அமெரிக்கவில் 8,452 பேர் பலியாகி உள்ளனர்.

*ஸ்பெயின்: 1,26,168 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 11947 பேர் பலியாகி உள்ளனர்.

*ஈரான்: 55,743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3452 பேர் பலியாகி உள்ளனர்.

*யுனைட்டட் கிங்டம்: 41,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4313 பேர் பலியாகி உள்ளனர்.

*துருக்கி: 23,934 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 501 பேர் பலியாகி உள்ளனர்.

*சுவிஸ்: 20,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 666 பேர் பலியாகி உள்ளனர்.

*இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைக்க பிரதமர் மோடி அழைப்பு.

மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். விளக்குகளுக்கு பதில் செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்த அழைப்பு. கொரோனாவிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட பிரதமர் மோடி கோரிக்கை.

*தமிழகத்தில் கொரோனா பலி 4 ஆக உயர்வு:

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்ரல். 3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருந்தது தற்போது  உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் மேலும் ஒருவர் உயிரிழப்பு.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் பலி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு. 61 வயது முதியவர் நள்ளிரவில் உயிரிழப்பு -  தமிழக சுகாதாரத்துறை தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages