அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை:

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை.
மறு உத்தரவு வரும் வரை அரபிக் கல்லூரி அருகே நடத்திக்கொள்ள அனுமதி - மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

*தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் மளிகைப் பொருள் வீடு தேடி வரும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்.

*தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 46,970 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு .
35,206 வாகனங்கள் பறிமுதல்; ரூ.16,27,844 அபராதம் விதிப்பு - தமிழக காவல்துறை.

*கொரோனா சோதனை, டிரேசிங், தனிமைப்படுத்துதலில் கவனம் செலுத்த மோடி அறிவுறுத்தல்.

இனி அடுத்தடுத்த வாரங்களில் கொரோனாவுக்கான கான்டாக்ட் டிரேசிங்கில் கவனம் செலுத்துங்கள். லாக்டவுனை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்துங்கள் என மோடி அறிவுறுத்தல். முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தகவல்.

*ரூ.1,000 நிவாரணத் தொகை, ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு:
கொரோனா பாதித்த ஒருவர் ரேஷன் கடைக்கு வந்தால் பலருக்கு கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது - மனு.

*ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்.

*"கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்க வேண்டும்":

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை.
முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ. 3000 கோடி தேவை"
ஏற்கெனவே தமிழக அரசின் கோரிக்கையான ரூ. 9 ஆயிரம் கோடியை வழங்கவும் கோரிக்கை.

*நாளை காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் பேச்சு.

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 12 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை.

*மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

*சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு.

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி.
இதில் 74 பேர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு.
இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்- சுகாதாரத்துறை செயலர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

*அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு.
காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம். சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் பாஸ் கேட்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.-தமிழக காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages