கொரோனா தொற்று பாதிப்பு உடலில் அறிகுறிகள் தெரியாமலேயே தாக்கியிருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் தகவல்!அதிர்ச்சியளிக்கிறது. இதை மிக மிக உன்னிப்பா கவனிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

கொரோனா தொற்று பாதிப்பு உடலில் அறிகுறிகள் தெரியாமலேயே தாக்கியிருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் தகவல்!அதிர்ச்சியளிக்கிறது. இதை மிக மிக உன்னிப்பா கவனிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

கொரோனா தொற்று பாதிப்பு உடலில் அறிகுறிகள் தெரியாமலேயே தாக்கியிருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் தகவல்!அதிர்ச்சியளிக்கிறது. இதை மிக மிக உன்னிப்பா கவனிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி 
-—————— -—————— -——————
         
கொரோனா தொற்று ஒருவர் உடலில் தாக்கியிருந்தால் தும்மல், சளி, இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரியும். அதையறிந்து பாதிக்கப்பட்டவர் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இந்த செய்தியை பொதுமக்கள் நம்பி இருந்தனர்.
          
ஆனால் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர், கொரோனா வைரஸ் ஒருவர் உடலில் தொற்றி பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு சளி, தும்மல், காய்ச்சல்,இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருப்பார். இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு நோய் தொற்றுக்கான எந்த விதமான அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்றுள்ளது என்று தாம் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.    
      
கொரோன பாதிப்பு மே மாதம் 2வது வாரத்தில்தான் கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். யாருக்கு தொற்று இருக்கிறது என்ற அறிகுறி யாருக்குமே தெரியாமல் இருக்கும். அதிர்ச்சியளிக்கிறது.  
         
எனவே இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் குடும்பத்துடன் பாதுகாப்பாக, எச்சிரிக்கையாக இருக்க வேண்டும் மறவாதீர்கள்.
        
ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி வரை தளர்வு இல்லை என்றும் அரசு உறுதிப்பட அறிவித்துள்ளது.
மரவாதிர்கள் பாதுகாப்பு ... எச்சரிக்கை ....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages