இம்மாத இறுதி வரை ஊரடங்கு தொடர வாய்ப்பு! பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு! - Agnipuratchi

இம்மாத இறுதி வரை ஊரடங்கு தொடர வாய்ப்பு! பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு!

Share This

இம்மாத இறுதி வரை ஊரடங்கு தொடர வாய்ப்பு! பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு!

21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் 7 நாட்கள் எஞ்சியுள்ளன. மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா , கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் ஊரடங்கை நீட்டிக்காமல் தளர்த்துமாறு கோரியுள்ளன.

இந்நிலையில், கொரோனாவிற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுக் கூட்டம் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என சூசகமாகத் தெரிவித்தனர்.

வீடியோ: https://youtu.be/6PUWFh6y42g

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages