அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.சி.யுவிற்கு மாற்றம்.
கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
*உலகம் முழுக்க 13,90,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுக்க 2,97,583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுக்க 79,147 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 5700 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் 387,004 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,789ஆக உயர்வு!
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111லிருந்து 124ஆக அதிகரிப்பு!
குணமடைந்தோரின் எண்ணிக்கை 319லிருந்து 353 ஆக உயர்வு!
*தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது - பீலா ராஜேஷ்!
இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 லிருந்து 7ஆக அதிகரிப்பு
*மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1018 ஆக உயர்ந்தது. மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதித்தோர் எண்ணிக்கை 1018 ஆக அதிகரிப்பு.
*இன்று உலக சுகாதார தினம்!
ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்! நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் - உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள்!
*எம்.பி.க்கள் ஊதியம் பிடித்தம், மேம்பாட்டு நிதி நிறுத்தம் உத்தரவை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.
மத்திய அரசின் அறிவிப்பால் பொருளாதார அவசர நிலையை நோக்கி நாடு போகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது- தொல்.திருமாவளவன், எம்.பி.
*புதுச்சேரியில் இனி காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மதியம் 2.30 வரை அத்தியாவசிய கடைகள் செயல்பட்ட நிலையில் மேலும் நேரம் குறைப்பு. - முதல்வர் நாராயணசாமி.
*மேற்கு வங்கத்தில் ஒரு கடையில் கொரோனா வைரஸ் வடிவத்தில் இனிப்பு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை
*கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா ரத்து. புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
*கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே; அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. - மத்திய அரசு.
கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது.
*அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு.
அண்டை நாடுகள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து அனுப்புகிறது இந்தியா. ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தை வழங்காவிட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபரிடம் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தியா அறிவிப்பு. அமெரிக்காவின் மிரட்டும் தொனிக்கு பணியக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் இந்தியா முடிவு.
*கொரானோ அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம் - மத்திய அரசு விளக்கம்.
பாராசிட்டமால், ஹைட்ராக்ஸி குளாரோ குயின் மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை - ஹைட்ராக்ஸி குளோரா குயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசு விளக்கம்.
*காய்கறி வாங்குவதாக கூறி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பைக்கில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை.- காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
*கொரோனா தடுப்புக்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தந்த நிதியை அரசு ஏற்க மறுக்கிறது.
முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பின்னர் நிதியை ஏற்க மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது - மு.க.ஸ்டாலின்.
*கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரசாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்கு பதிவு.
பாஸ்போர்ட் விதிமீறல், நோய்களை பரப்புதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு -ஈரோடு சூரம்பட்டி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
*இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும், ஆனால் உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும். நட்பு என்பது பதிலடி குறித்தது அல்ல - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து ராகுல்காந்தி கருத்து
*BREAKING: வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு. அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை அடுத்து முடிவு எடுக்கப்பட வாய்ப்பு
வீடியோ: https://youtu.be/6PUWFh6y42g
*BREAKING: வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு. அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.
*நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைக்கும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது எம்பிகளை நெருக்கடியில் நிறுத்தும் - ஸ்டாலின்.
*டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது டிஎன்பிஎஸ்சி.
* மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்.
இந்த தொகை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் - சோனியா காந்தி.
*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த உத்தரவு - முதல்வர் பழனிசாமி.
எம்.எல்.ஏ-க்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் - முதலமைச்சர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்.
செந்தில் பாலாஜி அளித்த நிதியை தொகுதியை காரணம் காட்டி ஏற்கவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.
*கொரானோ தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்குவதாக நடிகர் அஜீத்குமார் அறிவிப்பு.
பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரணநிதிக்கு தலா 50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கு ரூ.25 லட்சமும் வழங்குகிறார் நடிகர் அஜீத்குமார்
*தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
*மக்களை அவமரியாதையுடன் நடத்தக்கூடாது - காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை.
மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேண்டுகோள்.
சமூக இடைவெளியை கடைபிடித்து காவல் பணிகளை ஆற்ற அறிவுறுத்தல்.
உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்.
*கொரோனாவை விட கொடூரமான முறையற்ற மருத்துவம்!
கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பு! ஆந்திர மாநிலம் சித்தூரில் ஊமத்தை மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடம்! உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவிப்பு!
*சென்னையில் 18 லட்சம் குடும்பங்கள், 36 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இவர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் காய்கறி கடைகள் இன்று முதல் ஆரம்பம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
*சொந்தமாக கொரோனா மருத்து தயாரித்து குடித்த 8 பேர் கவலைக்கிடம்.
கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரிப்ப. ஆந்திர மாநிலம் சித்தூரில் ஊமத்தை மருந்து குடித்த 8 பேர் கவலைக்கிடம்.
உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவிப்பு.
*இரும்பு, சிமெண்ட், உரம் ஆகிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி திரும்பப் பெறப்பட்டது - தமிழக அரசு.
இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி.சர்க்கரை, காகிதம், கண்ணாடி, டயர், சாயத்தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளித்தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி திரும்பப் பெறப்பட்டது - தமிழக அரசு.
* கோவில்களில் வேலை செய்யும் அர்ச்சகர்களுக்கு முழு அடைப்பு காரணமாக கோவில் மூடப்பட்டதால் வேலை இன்றி இருக்கும் அர்ச்சகர்களுக்கு தலா ரூ 1000/- வழங்கப்படும் -தமிழக அரசு
No comments:
Post a Comment