நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி - Agnipuratchi

நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Share This

நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.  செய்தியாளர்கள் சந்திப்பில் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

ஜனவரி 31ல் மருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நோய் தொற்று ஆரம்பிக்கும் முன்பே தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

நோய் தடுப்புக்காக எனது தலைமையில் 12 முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

3 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 15 ஆக உயர்வு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு.

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267-ஆக உயர்வு.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.

இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான பரிசோதனை கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரண கொள்முதலில் தாமதம் என்ற எதிர்கட்சிகளின் விமர்சனம் தவறானது. உயிர்பலியை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

நாட்டிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முன்னிலையில் இருப்பது தமிழகம் தான். தமிழகத்தில் அரசு சார்பாக 17 , தனியார் சார்பில் 10 என மொத்தம் 27 பரிசோதனை மையங்கள் உள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். செய்தியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் மொத்த செலவையும் அரசு ஏற்கும்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது.
நிதி வழங்கிய அனைவருக்கும் அரசு சார்பில் நன்றி.

அரசின் 138 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தலாம். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காற்கறிகளை நடமாடும் காய்கறி கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,

தமிழகம் முழுவதும் நாள்தோறும் 4500 வாகனங்கள் மூலம் 2500 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

காய்கறி விலையேற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. போன மாதம் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

புயல், சுனாமி எது வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார். இவ்வாறு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages