அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் விலை வீழ்ச்சி!

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாள்களாக விலை உயர்ந்து மக்களை கவலைப்பட வைத்த காய்கறி விலை இன்று பாதியாக குறைந்தது.

பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று முதல் அதிகளவு காய்கறி, தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை குறைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழங்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

*ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

*கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை.
சச்சின், கங்குலி, பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்டோர் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்பு.

*உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் - உத்தரப்பிரதேச அரசு.

*வளர்ப்பு பிராணிகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
அதனால் வளர்ப்பு பிராணிகளை யாரும் கைவிட வேண்டாம் - சென்னை மாநகராட்சி.

*மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில், தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். - தமிழக அரசு.

டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும். சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்ததால் தமிழக அரசு எச்சரிக்கை.

*வீடுகளுக்கு டோக்கன் கொடுக்கும் போதே ரூ1,000 நிதி உதவியும் வழங்கப்படும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ரூ3,000  உதவித் தொகை வழங்கப்படும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் - முதல்வர் பழனிசாமி.

எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை; அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது.
தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்-முதல்வர் பழனிசாமி.

*சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு.
சிங்கப்பூரில் ஏப்ரல் 7ம் தேதி முதல், ஒரு மாத காலத்திற்கு முழு ஊரடங்கு.

*முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தில், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - தலைமைச் செயலாளர் சண்முகம்.

*ராமநாதபுரத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 25 பேரில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.

*கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கின் எதிரொலி:

இந்திரா கேண்டீனில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் ரத்து. தவறாக பயன்படுத்தப்படுவதாக நகர மேம்பாட்டு நிர்வாகம் விளக்கம்.
இந்திரா கேண்டீன் என்பது தமிழகத்தில் அம்மா உணவகம் போல் செயல்பட்டு வருவது.

*கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம். கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.

*சென்னை: தலைமைச் செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

*சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம்: நோயாளி  தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருந்து, உணவு வழங்கும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்படும். - அமைச்சர் விஜயபாஸ்கர்.

*இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்வு - சுகாதாரத்துறை

*டெல்லி மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு. சேலத்தில் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 58 வயதான நபர் திடீரென உயிரிழந்தார்.

*கொரோனா கண்டறியும் சோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.4,500 கட்டணம் நிர்ணயம் செய்ததற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

*பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரணத்திற்கு உச்சநீதிமன்ற ஊழியர்கள் ரூ.1,00,61,989 நிதியுதவி.

*புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற வராத ஒப்பந்த ஊழியர்கள் 54 பேரை பணிநீக்கம் - மாவட்ட ஆட்சியர்.

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற அறிவுறுத்திய நிலையில், பணிக்கு வராத ஊழியர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் விளக்கம்.

*கொரோனா  தொற்றுள்ள இருவர் தப்பி ஓட்டம்:

சென்னை: ராயப்பேட்டை மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி என தகவல்.
இருவரும் தப்பிவிட்டனர் என காவல் துறையிடம் சுகாதாரத் துறை புகார்.

*கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுப்பு:

கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம். தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார். 40 பேர் மீது வழக்குப்பதிவு.

*தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்  - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 - ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் உருவாக்கி நோயை கட்டுப்படுத்துகிறோம். தமிழகத்தில் கொரோனா பாதித்த 411 பேரில் 364 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என்றார் -சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

*டெல்லி மாநாடு சென்று வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது- மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.

17 பேருக்கு நடைபெற்ற சோதனையில் 3 பேருக்கு உறுதி. இன்னும் 23 பேர் முடிவுகள் நாளை தெரியும். இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் உயிரிழந்த 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை -ஆட்சியர் அன்புச்செல்வன்.

*வழக்கம்போல் இறச்சி கடைகள் இயங்கும். சமூக இடைவெளி விட்டு வாங்க வேண்டும்.  உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி உத்தரவு.

*உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,163 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இத்தாலி - 13,915, ஸ்பெயின் - 10,935, அமெரிக்கா - 6,095, பிரான்ஸ் - 5,387 பேர் உயிரிழப்பு.

*இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,301 லிருந்து 2,547 ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

*இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 478 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது- மத்திய சுகாதார அமைச்சகம். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 லிருந்து 62 ஆக அதிகரிப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

*மகாராஷ்டிராவில் புதிதாக 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 490 ஆக அதிகரித்தது.

*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு, ரூ.11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages