அக்னிப்புரட்சி (03.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் 34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.44 லட்சமானது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்தது.
அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்தது.
அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 67,140 ஆக உள்ளது.
ஸ்பெயினில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.45 லட்சமானது.
இத்தாலியில் கொரோனாவால் 2.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 35,365லிருந்து 37,336ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 9,065லிருந்து 9,951ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,152லிருந்து 1,218ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக உயர்வு .
சென்னையில் ஒரே நாளில் 174 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு பாதிப்பு உறுதி-சுகாதாரத்துறை.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,828 ஆண்கள், 928 பெண்கள், 1 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை.
*கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற மேலும் 8 பேருக்கு கொரோனா.
பண்ருட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடலூர் சென்ற 700 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தனிமை படுத்தப்பட்டுள்ள 700 பேரில் 550 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கடலூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு.
*சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது:
சென்னை - 52,
அரியலூர் - 22,
கடலூர். - 17,
காஞ்சிபுரம் - 7,
விழுப்புரம் - 20,
பெரம்பலூர் - 1.
No comments:
Post a Comment