அக்னிப்புரட்சி (07.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (07.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (07.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,61,398 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,67,062 ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,21,524 ஆக உயர்வு.

அமெரிக்காவில் மேலும் 25,254 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12,62,887 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மேலும் 2,524 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 75,490 ஆக உயர்வு.
இங்கிலாந்தில் 30,076 ஆகவும்.
இத்தாலியில் 29,958 ஆகவும்.
ஸ்பெயினில் 26,070 ஆகவும்.
பிரான்சில் 25,809 ஆகவும்.
ஜெர்மனியில் 7,322 ஆகவும்.
ஈரானில் 6,486 ஆகவும், சீனாவில் 4,633 ஆகவும் பலியாகினர்

*இந்தியாவில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 லிருந்து 53045 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 14,183 லிருந்து 15,331 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 லிருந்து 1,694 ஆக உயர்வு- மத்திய அரசு.

*தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா உறுதி. பாதிப்பு எண்ணிக்கை 5409 ஆக உயர்வு...

தமிழகத்தில் இன்று இருவர் பலி... உயிரிழப்பு 37 ஆக உயர்வு...
சென்னையில் இன்று மட்டும் 316 பேருக்கு கொரோனா உறுதி. மொத்தம் பாதிப்பு 2644 ஆக உயர்வு. தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1547 சிகிச்சையில் உள்ளோர் 3822 ஆக அதிகரிப்பு.

*ஆந்திராவில் விஷவாயு கசிவு - 1,000 பேர் பாதிப்பு. விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் சுமார் 1,000 பேர் பாதிப்பு.

நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்.

சாலையில் சென்ற பலர் விஷவாயு பாதிப்பால் மயங்கி விழுந்ததால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

3 கி.மீ தொலைவுக்கு விஷவாயு கசிவால் 1,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்.

விஷவாயுவை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.

*சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர் மாயம்

60 வயது நபர் கடந்த 29ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்றிரவு கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக புகார்.
மாயமான நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் தீவிரம்.

* தமிழகத்தில் 44 நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன

மாஸ்க், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மதுபிரியர்களுக்கு மதுபானங்கள் விற்பனை

*கொரோனா பரவி வரும் காலத்தில் மதுக்கடைகளை திறப்பது எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்

*மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தின் முன்பு குடும்பத்தினருடன் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டம்
தேவையா தேவையா...!மதுக்கடைகள் தேவையா...! என்ற முழக்கத்தை ஸ்டாலின் எழுப்பினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு தங்கபாலு கருப்புச்சின்னம் அணிந்து போராட்டம்

*திருப்பூர் எம்.எஸ் நகர் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை அடுத்து பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டம், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது

*கோயம்பேடு சந்தை தொழிலாளர் களில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி

திருமங்கலம் சமூகநலக்கூடத்தில் தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா உறுதி தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடத்தியதில் கொரோனா உறுதியானது

*தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆக அதிகரிப்புஸஅரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளர் அனைவருக்கும் பொருந்தும்

*ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு.

*விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயு கசிவு நடந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது: ராகுல்காந்தி

*கோயில்கள் திறக்கலாம் தமிழகம் முழுவதும் 33% பணியாளர்களை கொண்டு கோயில்களை திறக்கலாம்
பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு

*ஆந்திர விஷவாயு பாதிப்பு பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

*ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - குடியரசுத் தலைவர்

*கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம். அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே வேறு இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது - சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

*விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு.

*மதுவே தேவையில்லை என்பதுதான் அரசின் முடிவு; படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்; ஒரே நாளில் ஒழிக்க முடியாது; மதுவிற்கு திமுகதான் முழு காரணம்!"- அமைச்சர் ஜெயக்குமார்

*ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்வு.

*வெப்பச்சலனம், மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு!
குமரிகடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

*முதலமைச்சர் வீட்டில் பணியாற்றிய காவலருக்கு கொரோனா என்ற செய்தி உண்மையல்ல பெண் காவலர் முதல்வர் வீட்டில் பணியாற்றவில்லை - காவல்துறை விளக்கம் கிரீன்வேஸ் சாலையில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை"

*ஆந்திராவில் விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி வேதனையும், துயர‌மும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

*ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன ? - தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி

தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா?
மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் - விஜயகாந்த்

*டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி மனு-டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. பலரிடம் ஆதார் இல்லை என்பதால் அதற்கு விலக்கு அளிக்க கோரிக்கை. மனுவை வரும் 14ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவிப்பு.

*ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது.
சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்.

*சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மது விற்பனை ரூ. 140 கோடி முதல் ரூ.160 கோடி எனத் தகவல்!
இன்றைய மதுவிற்பனை குறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல்!
வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு ரூ.80 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இன்று மிக அதிக வசூல்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages