அக்னிப்புரட்சி (11.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு 41,79,720 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் உலக நாடுகளில் மரணங்கள்- 2,83,846 ஆக உயர்வு.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் குணமடைந்தோர் எண்ணிக்கை- 14,90,496.
அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 80 ஆயிரத்தை தாண்டியது.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67ஆயிரத்தை தாண்டியது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152ஆக உயர்வு. உயிரிழப்பு எண்ணிக்கை 2,206 ஆக அதிகரிப்பு.ஸ20,917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 14-வது இடம்.
* இந்தியாவில் அதிக பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம். அங்கு கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,230 பேர் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,401 பேர்
*தமிழகத்தில் 8 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு வைரஸ் தொட்டு உறுதியாகியுள்ளது கொரோனா உறுதி செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 7,204 லிருந்து 8,002 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா. சென்னையில் மட்டும் இதுவரை 4,377. பேர். இன்று ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆனது. இதுவரை கொரோனாவால் உயிரிழப்பு 53 பேர்.
*அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை.
பொது முடக்கம் 17ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் இன்று ஆலோசனை. காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
*திருமழிசை தற்காலிக சந்தையில் இதுவரை 3 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனை.
ரூ.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 3500 டன் காய்கறிகள் வரத்து.
*பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு:
விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம்.
சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக; இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
10ஆம் வகுப்பு சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது.
*திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன்:
பக்கவாதம் ஏற்பட்டதாக, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ஆம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை. பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன் அங்குள்ள சிறையில் உள்ளார்.
மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி மனு - இன்று விசாரணை நடைபெற உள்ளது. சமயபுரம், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை, பாலக்கரை திருட்டு வழக்குகளில் ஜாமீன் கோரி மனு.
*தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு என்பது வதந்தி - அமைச்சர் காமராஜ்
ஒருநபர் அட்டைக்கு 7கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 12கிலோவாகவும் குறைப்பு வதந்தி
தற்போது ஒருநபர் அட்டைக்கு 12கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16கிலோவும் வழங்கப்பட்டது உறுதி.
*திருநள்ளாறு காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று எதிரொலி
காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு.
காவல்நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இடங்களில் பணியாற்றிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை.
காவல்நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இடங்களில் பணியாற்றிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை.
*வழிபாட்டு தலங்கள் - மே 15-ல் முடிவு:
வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மே 15-ல் முடிவு செய்யப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். அனைத்து மத தலங்களையும் திறக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்.
*ஒரு வாரத்திற்குள் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி.
இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் 8 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை முகாம்களில் தங்கியிருக்க வேண்டுகோள்.
*கடலூர்: நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக என்.எல்.சி. உறுதி. என்.எல்.சி. நிர்வாகத்தின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
*அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அரியலூரில் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இது வரை 48 பேர் குணமடைந்துள்ளனர்.
*டாஸ்மாக் விவகாரம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை - தமிழக அரசு.
*'சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் - முதல்வர்':
கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.- முதல்வர் பழனிசாமி கோரிக்கை.
*துக்க நிகழ்ச்சி, மருத்துவ அவசர தேவைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்கப்படுவதாக அரசு விளக்கம் தற்போது அவசர தேவைக்கான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை. - தமிழக அரசு. நேற்று வரை 3,61,433 விண்ணப்பங்கள் பெற்று 3,48,210 விண்ணப்பங்களுக்கு அனுமதி.
*விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்: - 7 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு.
*விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்: அதிமுகவிலிருந்து இருவர் நீக்கம்:
விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் - ஓபிஎஸ்- ஈபிஎஸ்.
*திருவேற்காடு நகராட்சி 2 ஊழியர்களுக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்’
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி 2 பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக திருவேற்காடு நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
* கொதிக்கிறது... தண்ணீர் கேட்டே பிரிந்ததே உயிர்... சிறுமியின் வாக்குமூலம்...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில், வீடு புகுந்து பத்தாம் வகுப்பு படித்து வந்த #ஜெயஸ்ரீ என்ற சிறுமியின் கையை கட்டி பெட்ரோல் ஊத்தி தீ வைத்த முன்னாள் கவுன்சிலர் அதிமுக முருகன்.
https://m.helo-app.com/al/xwdxsdwyy
*தீயிட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய். 5 லட்சம் நிவாரண நிதி முதல்வர் பழனிசாமி:
நெஞ்சை பதறவைக்கிறது" விழுப்புரம் மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கண்டனம்;
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரத்தில் தீயிட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய். 5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார தீ காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
*குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப். 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு.
*தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்மா தானம்.
தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment