அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,57 லட்சமாக ஆக உயர்வு.
வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,63 லட்சமாக ஆக உயர்வு.
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,72 லட்சமாக ஆக உயர்வு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்
அமெரிக்காவில் 13.47 லட்சமாக அதிகரிப்பு. 80,037 பேர் உயிரிழப்பு. குணமானோர் 2,38 லட்சம் பேர்.
ஸ்பெயின்யில் 2.62 லட்சமாக அதிகரிப்பு
26,478 பேர் உயிரிழப்பு. குணமானோர் 1,73 லட்சம் பேர்.
இத்தாலியில் 2,18 லட்சமாக அதிகரிப்பு
30,305 பேர் உயிரிழப்பு குணமானோர் 1,03,031 பேர்.
இங்கிலாந்தில் 2,15 லட்சமாக அதிகரிப்பு 31,587 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் 1,98 லட்சமாக அதிகரிப்பு
1,827 பேர் உயிரிழப்பு குணமானோர் 31,916 பேர்.
பிரான்சில் 1.76 லட்சமாக அதிகரிப்பு
26,310 பேர் உயிரிழப்பு குணமானோர் 56,038 பேர்
ஜெர்மனியில் 1,71 லட்சமாக அதிகரிப்பு
7,549 பேர் உயிரிழப்பு, குணமானோர் 1,43 லட்சம் பேர்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,939 ஆக உயர்வு. உயிரிழப்பு எண்ணிக்கை 2,109 ஆக அதிகரிப்பு. 19,358 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
*மகாராஷ்டிராவில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 20,228 பேர். குணமாகி வீட்டிற்கு சென்றோர் 3,800 பேர். கொரோனாவல் பலியானவர் களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரிப்பு.
*தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி - அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 3 பேர் பலி. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு. 405 ஆண்கள், 195 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 உயர்வு இன்று 58 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர் இதோடு சேர்த்து 1605 பேர் குணமாகி உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்.
மலேசியாவில் மார்ச் 18 முதல் லாக்டவுன் எனப்படும் நடமாட்ட காட்டுப்பாட்டு ஆணை அமல்.
மலேசியாவில் மே 12-ந் தேதி உடன் லாக்டவுன் முடிவடையும் நிலையில் நீட்டிப்பு .
*10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்.
*சீனாவில் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்களை விமானங்கள் மூலம் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*இந்த நேரத்தில் மதுக்கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்-நடிகர் ரஜினிகாந்த் கருத்து.
கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் கருத்து.
*பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு.
கடலூர் மாவட்டம் நெய்வேலி 2 வது அனல்மின் நிலையத்தில் 7ம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு பணியாளர் உயிரிழப்பு.
ஏற்கனேவே சர்புதின் என்பவர் உயிரிழந்த நிலையில் சண்முகம்(49) என்ற ஒப்பந்த தொழிலாளி இன்று உயிரிழப்பு. உரிய இழப்பீடு வழங்க கோரி இறந்த சண்முகம் உறவினர் மற்றும் சக ஊழியர்கள் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
*அமைச்சர் எம்.சி.சம்பத் பற்றி பொய்யான தகவல் பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாட்ஸ்-ஆப் குழு அட்மின் உள்ளிட்ட இருவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
*தமிழ்நாட்டில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,204ஆக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3839ஆக அதிகரிப்பு. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு
இவர்களோடு சேர்த்து தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47ஆக உயர்வு
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 135 பேர் டிஸ்சார்ஜ் கொரோனா விலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1959ஆக உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியானது
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கிருஷ்ணகிரியில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா; மொத்தம்-20 பேருக்கு பாதிப்பு
திருநெல்வேலி-10, பெரம்பலூர்-9, காஞ்சிபுரம்-8 பேருக்கு இன்று கொரோனா
ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 6 பேருக்கு இன்று கொரோனா உறுதி
அரியலூர், மதுரை மாவட்டங்களில் தலா 4 பேருக்கு இன்று கொரோனா உறுதி
செங்கல்பட்டைச் சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு
சென்னையைச் சேர்ந்த 59 வயது நபர், கொரோனாவால் இன்று உயிரிழப்பு
திருவள்ளூரைச் சேர்ந்த 55 வயது நபர், கிட்னி பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், கொரோனாவால் பலி
*மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை. முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும்.
நாளை மாலை முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம். சிறப்பு ரயில்களாக கருதப்படும் - டெல்லியில் இருந்து சென்னை உட்பட 15 நகரங்களுக்கு இயக்கம்.
*சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (11.05.2020) மாலை 4 மணி முதல் தொடங்கும். முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர் - ரயில்வே நிர்வாகம்.
*முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதி.
No comments:
Post a Comment