தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி - 11 - Agnipuratchi

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி - 11

Share This

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி - 11

வேளாண்மையின் முக்கியத்துவம் கருதி பா.ம.க தொடர்ந்து போராடி, வாதாடி சட்டமன்றத்தில் வேளாண் சாதனைகளில் சில மட்டுமே... தமிழ்நாட்டில் உழவர் சந்தை துவக்கப்பட்டது.
 
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,விவசாய உற்பத்தி அனைத்துக்கும் விற்பனை மையங்களும்,விலை நிர்ணயமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து தற்போது துவங்கப்பட்டுள்ள உழவர் சந்தை காய்கறிகள்,பழங்கள் போன்றவை மட்டுமே விற்பனை மற்றும் விலை நிர்ணயம் வந்தால் போதாது. எல்லாவற்றுக்கும் தேவை.அதை உடனே நிறைவேற்ற வேண்டும்.
 
முதலமைச்சர் அவர்கள்: ஜி.கே.மணி அவர்களே, உழவர் சந்தை திட்டத்தை அரசு திறம்பட நிறைவேற்றும்.மற்ற உங்கள் கோரிக்கைகள் படிப்படியாக தொடர்ந்து நிறைவேற்றுவோம்.
 
ஜி.கே.மணி: உழவர் சந்தை செல்லும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை,வாகன வசதி இலவசம்,அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும். இதை நிறைய உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினார்கள். அதன்பின்னர் உழவர் சந்தைக்கு ரூபாய் ஒரு கோடி வீதம் கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு அடையாள அட்டை, அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் எடுத்துச்செல்ல இலவச அனுமதி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
 
விவசாயம் செய்யும் நிலப்பரப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.தமிழ்நாட்டில் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது.உதாரணத்திற்கு காவிரி நீர்ப் பாசன பரப்பு தமிழ் நாட்டில் 29 லட்சம் ஏக்கராக இருந்தது.அதிலும் முப்போகம் பயிரிடப்பட்டது பின் இரண்டு போகமாக மாறி,சில ஆண்டுகளில் ஒரு போகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.29 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் முதல் போகம் 22 லட்சம் ஏக்கராகவும், 2ஆம் போகம் 6 1/4  இலட்சம் ஏக்கராகவும் குறைந்துள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நீர்ப்பாசன நிலப்பரப்பும், மானாவாரியில் பயிர் செய்யும் நிலப்பரப்பும் குறைந்துள்ளது.
கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா மகாராஷ்டிரா,மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாய நிலப்பரப்பு மிக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் ஆற்று நீர் பாசன பரப்பு 6 1/2 இலட்சம் ஏக்கராக இருந்தது,12 இலட்சம் ஏக்கர், 16 இலட்சம் ஏக்கர்,20 இலட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. அதோடு ஏரி,குளம் பாசனம் 2 லட்சம் ஏக்கராகவும் உயர்ந்துள்ளது. மழைநீர் ஒரு சொட்டு வீணாகாமல் அணை,ஏரி, குளம்,கண்மாய், போன்றவற்றில் தேக்கி பயன்படுத்த வேண்டும்.புதிய தடுப்பணைகள்,ஏரிகள் உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.

நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் அதேவேளையில் மானாவாரிப் பயிரான ராகி,கம்பு, சோளம்,தினை, வரகு,சாமை போன்ற சிறு தானியங்கள் கடலை,எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்கள் உளுந்து, துவரை, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் காய்கறி,பழங்கள், பூக்கள் என எல்லா உற்பத்திகளையும் அதிகரிக்கச் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
விவசாயம் முதல் தொழில் என்பதால் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் பம்பு செட்டுக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தால் உடனே வழங்கப்படு கிறது. தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்கள் பம்பு செட்டுக்கு மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் 8 ஆண்டுகள், 10ஆண்டுகள் காத்திருக் கும் நிலை உள்ளது. உடனே இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அமைச்சர்: ஜி.கே.மணி,உங்கள் கோரிக்கையை அரசு ஏற்கிறது.மின் பற்றாக்குறை உள்ளது.எனவே மின் துறைக்கு தொகை செலுத்தி,சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங் கலாம் என்றார். அறிவிக்கப்பட்டது.
(சில வருடங்கள் ஆனது.சிறப்பு மின் இனைப்புக்கு பணம் செலுத்தி பல ஆண்டுகளாகியும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது).

ஜி.கே.மணி: முதல் அமைச்சர் அவர்களே,பெரிய அளவில் கடன் வாங்கி தொகை செலுத்தியும் விவசாயிகள் காத்திருக்கின்றார்களே, ஏன் இந்த நிலை? மாற்றுங்கள்.அதோடு மின் திருட்டு,மின்வழி விரைய கசிவு(லைன் லாஸ்)இவற்றை சரி செய்யலாமே.
  
இவ்வாறு விவசாயிகளின் மின்சாரப் பிரச்சனை நீண்ட நாட்கள் நானும் வாதாடியதோடு,நிறைய உறுப்பினர் களும் வாதாடியதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் சிறு,குறு விவசாயிகளின் அனைத்து பழைய மின்மோட்டார்களும் மாற்றி புதிய மின் மோட்டார்களை அரசு இலவசமாக வழங்கியது.பெரும் விவசாயிகள் மின் மோட்டாருக்கு 50%மானியத்தில் புதிய மின் மோட்டார்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.
 
அதோடு சிறப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2,39,511 விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தில் சேர்க்கப்பட்டதுடன், அதற்கு அடுத்தும் 2,00,000 பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் கடன் பிரச்சினை,வட்டி,கூட்டு வட்டி, அதனால் விவசாயி தற்கொலை சாவுகள் அதிகரிப்பு என வாதாடி வந்தோம்.மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் போராட்டங்கள் நடத்தினோம்.
  
அடுத்து தேர்தல் முடிந்து,ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் கடன் 7,000 கோடி தள்ளுபடி என அறிவிப்பு செய்தார். அதன் பின்னர் எல்லா விவசாயிகளும் அந்தத் தள்ளுபடியில் பயன்பெற வேண்டுமென வற்புறுத்தினோம். அதில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் ஏராளமான ஏழை விவசாயிகள் பயனடைய முடியவில்லை அழுத்தம் கொடுத்து பின்னர் விவசாயிகள் பயன் பெற்றனர்.
  
விவசாயிகள் வறட்சியிலும்,மழைச் சேதத்தில் பெரிதும் நட்டத்துக்கு ஆளாகின்றனர்.தொடர்ந்து புதிய கடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி புதிய கடன் வழங்கப்பட்டது.விவசாயிகள் பெற்ற கடனுக்கு வட்டியே 2 மடங்கு, 3 மடங்கு வருகின்றது.எனவே வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என வாதாடி வட்டி 9% லிருந்து 7% ,பின் 5% ,கடைசியாக 4% ஆக அறிவிக்கப்பட்டது.பின்னர் பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
   
நெல்லுக்கு கூடுதலான விலை வேண்டுமென வாதாடி ரூ 600லிருந்து உயர்த்தி 2010_2011ல் சாதா ரக நெல் குவிண்டாலுக்கு ரூ 1050,சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ 1150 என உயர்த்தப்பட்டது.இது உரிய விலை இல்லை.எனவே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும் எனவும் வாதாடினோம்.
  
கரும்புக்கு கட்டுப்படியான விலை இல்லை.வறட்சியால் திருவண்ணாமலை,கடலூர்,தருமபுரி வேலூர்,மதுரை போன்ற மாவட்டங்களில் கரும்பு காய்ந்து தீவைத்து விவசாயிகளே கொளுத்தும் நிலை உருவாகிவிட்டது.அதோடு கரும்புக்கு ஆதார விலை (நிர்ணயம்) என்பது முத்தரப்புக் குழுவில் சர்க்கரை உற்பத்தி செலவை மட்டுமே கணக்கிட்டு நிர்ணயிக்கின்றனர். சர்க்கரை ஆலையிலிருந்து வெளியாகும் மொலாசஸ் நல்ல விலை.அதை சேர்ப்பதில்லை. கரும்புச் சக்கை காகித உற்பத்திக்கு,மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருவதை கணக்கில் கொள்வதில்லை.

இதையெல்லாம் சேர்த்து கரும்புக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்.கரும்பு வெட்டியவுடன் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.( கோரிக்கையை ஏற்று கரும்பு டன் 1க்கு ரூபாய் 1014லிருந்து  ரூபாய் 2000 மாக் உயர்த்தப்பட்டது ) தொடர்ந்து வறட்சியில்,சில நேரம் மழை, புயல் மற்றும் காற்று சேதத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு என்பது பெயரளவில் கண் துடைப்பாக,கானல் நீராகவே உள்ளது.அதை சரியாக விவசாயிகள் பயனடையச் செய்ய வேண்டும். விவசாயிகள் பாதித்தால் அந்த (வட்டம்) தாலுக்கா முழுவதும் பாதிக்கப்பட்டி ருக்க வேண்டுமென்ற நிலையை மாற்ற வேண்டுமெனவும், அரசே பிரீமியத் தொகை செலுத்த வேண்டுமென வாதாடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  
விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அனைவருக்கும் முழு அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் வராத காரணத்தால் 100 நாள் வேலைத்திட்டத் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம்) தில் அரசு வழங்குவதோடு விவசாயிகளிடமிருந்து நபருக்கு ரூபாய் 50% வீதம் பெற்று விருப்பமுள்ள தொழிலாளர்களுக்கு 150 நாட்களுக்கு மேல் வேலை கொடுத்திட செய்யலாம்.
  
மரபணு மாற்று விதை அரசு அனுமதிக்க முற்பட்டபோது கடுமையாக எதிர்த்து தடுத்து நிறுத்தப்பட்டது.
  விவசாயிகளின் உப தொழிலான ஆடு,மாடு,கோழி,காடை,முயல் வளர்ப்பு மானியம் வழங்கிட வேண்டும்.மல்பரி பட்டுப்புழு வளர்ப்பு,மரவள்ளி கிழங்கு சாகுபடி மானியம் வழங்கி மேம்படுத்த வேண்டும்.
 
மேலும் சில சுருக்கமாக
*ஒவ்வொரு உற்பத்தி பொருளுக்கும் ஆண்டுதோறும் அல்லது பருவந்தோறும் விலை நிர்ணயம். *விவசாயிகள்_அதிகாரிகள் உள்ளடக்கிய விலை நிர்ணயக் குழு அமைத்தல்.
*தரிசு நிலங்களை விவசாய உற்பத்திக்கு கொண்டு வருதல்.
*மானாவாரிப் பயிர் செய்யும் நிலங்களுக்கும் பாசன வசதி ஏற்படுத்துதல்.
*விவசாய சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்கச் செய்தல்.
*தொடர்ந்து வட்டியில்லா கடன் வழங்குதல்.
*அனைத்து விவசாயிகளின் நிலங்கள் மண் பரிசோதனை செய்தல்.
*வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்குதல்.
*வேளாண் பல்கலைக்கழகங்கள் புதிதாக துவங்கி,ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதுமையைப் புகுத்தி,உற்பத்தியை பெருக்குதல்.
*வேளாண் கல்லூரிகள்_பயிற்சி மையங்கள் துவங்குதல்.
*வேளாண் பட்டதாரிகள்,படித்த இளைஞர்கள் விருப்பமுள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கடன் வழங்கி தோட்டக்கலை துறை, கால்நடை வளர்ப்பு பயிற்சி கொடுத்தல்.
*பால் பண்ணை துவங்க செய்தல்.
*எத்தனால் தயாரித்தல்.
*வேளாண் இடுபொருட்கள் இலவசமாக வழங்குதல்.
*வேளாண் கருவிகள் இலவசமாக வழங்குதல்,பெரிய இயந்திரங்கள் (டிராக்டர்,அறுவடை இயந்திரம் உள்ளிட்டவை) மானியத்தில் வழங்குதல்.
*ஒன்றியத்திற்கு ஒரு விற்பனை மையம் துவங்குதல்.
*ஒன்றியத்திற்கு ஒரு குளிர்பதன கிடங்கு அமைத்தல்.
*ஊதிய (ஆணையம்)க் குழு உள்ளது போல் வேளாண் ஆணையம் அமைத்தல்.
*ஒவ்வொரு உற்பத்தி பொருளுக்கும் மானியம் வழங்குதல்.
*வேளாண் நிதி நிலை அறிக்கை வழங்க வேண்டும்.
*இரசாயன உரம்,பூச்சி மருந்துகள் கட்டுப்படுத்தி இயற்கை வேளாண்மை ஊக்குவித்தல்.
*உணவு உற்பத்தியை பெருக்குதல் தன்னிறைவு காணுதல் விவசாயிகள் நலன் காத்தல் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்தல் நுகர்வோருக்கு உரிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்தல் காலத்தின் கட்டாயம்.

நாளைவேறு துறையில் தொடரும். பகுதி- 12

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages