அக்னிப்புரட்சி (24.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3.43 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதுவரை 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
28 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
53 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் இறப்பு விகிதம் 13 சதவீதமாக உள்ளது.
*இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,31,868-ஆக உயர்வு:
நாடு முழுவதும் இதுவரை 54,441 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,867-ஆக உயர்வு.
*தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதரத்துறை.
இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரானோவுக்கு 8 பேர் பலி.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 833 பேர் டிஸ்சார்ஜ்- சுகாதாரத்துறை.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 லிருந்து 8,324 ஆக அதிகரிப்பு.
*தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி.
சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி.
25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்கலாம் - தமிழக அரசு.
தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்.
55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல்.
*சென்னையை தவிர்த்து, மற்ற நகர்புற பகுதிகளில் இன்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறப்பு:
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சலூன்களை திறக்க அனுமதி.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி இல்லை.
*தமிழகம் முழுவதும் சென்னை தவிர்த்து நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.
சுமார் 60 நாட்கள் கழித்து இன்று முதல் சலூன் கடைகள் திறப்பு.
சென்னையை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது.
*புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு குறைந்த பட்சம் 5 காசுகள் முதல் அதிகபட்சம் 50 காசுகள் வரை உயர்வு. வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 காசுகள் முதல் அதிகபட்சம் 20 காசுகள் வரை உயர்வு.
*புதுச்சேரியில் கொரோனா வரியுடன் மதுபானக்கடைகளை திறப்பதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி.
புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் திறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
புதுச்சேரியில் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு இரண்டு மாதம் இலவச அரிசி வழங்க அனுமதி அளித்தார் துணைநிலை ஆளுநர்.
*கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா?: திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்.
வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க முடிவு. கொரோனா தடுப்பு நடவடிக்கையை சரியாக செய்யவில்லை என குற்றச்சாட்டு.
கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதமே தொற்று அதிகரிக்க காரணம். வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
*வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் - வானிலை மையம்.
*வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் துணிக்கடைகளை திறக்க அனுமதி. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு துணிக்கடைகள் ஏ.சி. வசதியின்றி, இரவு 9 மணி வரை திறக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர்.
*நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும். 9 கல்லூரிகளில், 7300 மாணவர்களுக்கு 35 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
*புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு - அரசாணை வெளியீடு.
தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியீடு. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிப்பு.
*கடலூர் மாவட்டத்தில் புதிய விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தைப் பொருத்தவரை விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை- அமைச்சர் தங்கமணி.
*புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க புதுவை அரசு அனுமதி.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் இயங்கும் என அறிவிப்பு. சமுக இடைவெளி, முக கவசம் அவசியம்.
*கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வந்தவர்கள்.
No comments:
Post a Comment