அக்னிப்புரட்சி (12.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42.53 லட்சமாக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,27,029ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,250ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756ஆக உயர்வு. உயிரிழப்பு எண்ணிக்கை 2,293 ஆக அதிகரிப்பு. 22,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா (12வது இடம்). கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு.
*கொரோனா தொற்று காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது.
கடலூர் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது.
10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி.
பயிற்சியில் உள்ள 124 பெண் காவலர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்.
*தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.
உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் - பிரதமர் மோடி.
*12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ல் தொடங்கும்- அமைச்சர் செங்கோட்டையன்.
*சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எம்.பி. ரவிக்குமார்
*இன்று தலைமைச் செயலகத்தில், ரூ.5.48 கோடி மதிப்பில் நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட் -ஆல் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய "நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்ட 14 வாகனங்கள்" சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தேன்.
*டாஸ்மாக் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல்.
டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக மனு.
*10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - ஸ்டாலின்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் தேர்வை நடத்த வேண்டும்.
*நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
*தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
திருச்சி, சேலம், கரூர், தர்மபுரியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை.
*தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
*கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில், பாதுகாப்பு பணியிலிருந்த காவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு.
*பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி. லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு.
*கடலூரில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா, ஒரு உயிரிழப்பு.
கடலூர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு. கடலூர் மாவட்டத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாக 49 வயது பெண் உயிரிழந்தார்
*ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி.
அனைத்து வித கோயில் பணியாளர்களுக்கும் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவு. இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு நிவாரண நிதி. 10448 பேர் பலனடைவார்கள் என தமிழக அரசு தகவல்.
*4-வது முறையும் ஊரடங்கு நீட்டிப்பதாக பிரதமர் பேச்சில் தெரிகிறது, புதுச்சேரியில் 4-வது முறையாகும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சில தளர்வுகள் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது- புதுவை முதல்வர் நாராயணசாமி.
*கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகே கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
தனிமைப்படுத்தல் முகாம்களாக கல்லூரிகள் செயல்படுவதால், இப்போதைக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது சாத்தியமில்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன்.
*என்எல்சி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.
கடலூர் நெய்வேலி என்.எல்.சியின் 2 ஆவது அனல்மின் நிலையத்தில் கடந்த 7ம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்த 8 பேரில், நிரந்தர தொழிலாளி பாவாடை(45) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு. சர்புதின், சண்முகம் ஆகிய இருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு. மேலும் 3 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*டாஸ்மாக் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு விசாரிக்கும். நாளை மறுநாள் (மே.14 ஆம் தேதி) காணொலி மூலம் விசாரிக்கப்படும். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினித் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் அடங்கிய முழு அமர்வு விசாரிக்கும்.
*திருத்தணிகாசலத்திற்கு 6 நாட்கள் போலீஸ் காவல். சித்தவைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி.
*தமிழகத்தில் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது மருத்துவ கவுன்சில்.
தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா என கண்டறிய ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
*கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம். மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது.
சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும்.
அந்த பயணிகளை ரயில்வே துறையே தனிமைப்படுத்தி வைக்க முதலமைச்சர் கோரிக்கை.
No comments:
Post a Comment