அக்னிப்புரட்சி (14.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (14.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (14.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47.27 லட்சமாக உயர்வு.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,57,735ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220ஆக உயர்வு.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,36,516 உயர்வு.
பலியானவர்களின் எண்ணிக்கை 85,456 ஆக உயர்வு.

இங்கிலாந்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 33,614 பேர்.
இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 31,068 பேர்.
ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை 27,321 பேர்.
பிரான்சில் பலியானவர்களின் எண்ணிக்கை 27,074 பேர்
ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,52 ஆயிரம் பேர் பலியானவர்களின் எண்ணிக்கை 2,300 பேர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281லிருந்து 78,003ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  24,386லிருந்து 26,235ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,415லிருந்து 2,549ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்வு.

சென்னையில் மேலும் 363 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 2 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் இதுவரை 66 பேர் உயிரிழப்பு. - அமைச்சர் விஜயபாஸ்கர்

*சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் நாளை முதல் முகக் கவசம் வினியோகம்:

குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என அறிவிப்பு. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்.
ஒருவருக்கு 2 முகக்கவசம் வீதம் வழங்க ஏற்பாடு.

*வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.
கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் பணிபுரிந்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் எனக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

*நாடு முழுதும் பயணிகள் ரயில் போக்குவரத்து வரும் ஜூன் 30 வரை ரத்து - ரயில்வே அமைச்சகம்.
முன்பதிவு செய்த தொகை முழுதும் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும்.
ஊரடங்கு முடியும்வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

*கோலார் தங்கச் சுரங்கத்தில், 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட முயன்ற கும்பல்.
சுரங்கத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மயங்கி விழுந்து 3 பேர் உயிரிழப்பு.
நள்ளிரவில் 2 பேர் சடலம் மீட்பு. மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரம்-இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை.

*டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள், விசாரணைக்கு உகந்ததல்ல - டாஸ்மாக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு.

கடைகளை திறக்க கூடாது என தொடர்ந்த வழக்குகளை தள்ளபடி செய்ய வேண்டும் - டாஸ்மாக் மனுவில் தகவல். மதுக்கடைகள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனம் பதில்மனு.

*மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு- சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு.
மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்- டாஸ்மாக்.

சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை
என்கவுண்டரில் கொல்ல வேண்டும். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்.

*முதல்வர் பழனிசாமியுடனான அலோசனைக்கு பின் மருத்துவ குழு செய்தியாளர் சந்திப்பு!:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்; அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். - முதல்வருடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ குழு பேட்டி.

*சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவலை 6 நாளிலிருந்து 4 நாளாக குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மத்திய குற்றப்பிரிவு காவலை எதிர்த்து திருத்தணிகாசலம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

*ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவினகையாக நாளொன்றுக்கு ரூ.200- தமிழக அரசு அறிவிப்பு. 34,000 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

*ஜி கார்னரில் 16 ஆம் தேதி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படாது.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் வரும் 16 ஆம் தேதி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படாது.
வரும் 17 ஆம் தேதி ஞாயிறன்று திருச்சியில் 10 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படாது- மாவட்ட ஆட்சியர்.

*தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகமாறியது.

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியபின் புயலாக மாறும். வங்கக் கடலில் பலமாக காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

*கொரோனாவால்  கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ?
பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.
15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை.

*ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது
ஒரு கி.மீ -க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு
ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது-தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல்

*ஜாக்டோ-ஜியோ க.மீனாட்சி சுந்தரம் காலமானார்.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் தஞ்சையில் காலமானார்.
தஞ்சை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

*‘விஜய் மல்லையாவை நாடு கடத்த தடையில்லை.
நாடு கடத்த தடை கோரி விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அனுமதியில்லை எனவும் அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை.
கடலூரை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது வழங்க தேசிய துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் பரிந்துரை.

*கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு அறிவிப்பு.

*ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.

தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதி; இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்- தமிழக அரசு.

*தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம்.

அடுத்த அறிவிப்பு நிதி, அவசரமாக தேவைப்படக்கூடிய மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அறிவிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என நம்பிக்கை. சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவித்த திட்டங்களுக்கு நன்றி.

*ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மூலம் 67 கோடி  பேர் பயனடைவர்.

* மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வருவாய் திரட்டுவது முக்கியமானதா? டாஸ்மாக் திறப்பு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
பொது அமைதி சீர்குலைந்தால் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது.வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு. - உயர்நீதிமன்றம்.

*தேர்வில் தோல்வியடையும் 9, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும்.

பள்ளிகளே கணினி வழியாகவோ அல்லது நேரடி தேர்வாகவோ நடத்திக் கொள்ளலாம்- சிபிஎஸ்இ விளக்கம்.
இறுதித் தேர்வின்றி ஏற்கெனவே எழுதிய பள்ளித்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

*டெல்லியிலிருந்து சிறப்பு ரயிலில் 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று சென்னை வந்தனர்.

டெல்லியிலிருந்து சென்னை வந்தவர்கள் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு,நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

*10ஆம் வகுப்பு தேர்வு - உயர்நீதிமன்றம் நாளை விசாரணை.
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரிய பொதுநல வழக்கை நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages