தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 2 ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.
*சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி.
*கிசான் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது
*இடம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள்.
*ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க நடவடிக்கை.
*மத்திய அரசின் அறிவிப்பால் 8 கோடி பிறமாநில தொழிலாளர்கள் பயனடைவர்.
*புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரேசன் பொருட்களை வழங்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
*நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது.
*ஊரடங்கு காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஊதியமாக ரூ.10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
*100 நாட்கள் வேலை திட்டத்தின்கீழ் 14.62 கோடி மனிதவேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
*ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
*நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
*ரூ. 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
*ஊரக கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி
*புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது.
*ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது.
*விவசாயிகளுக்கு ரூ. 30,000 கோடி அவசரகால கூடுதல் நிதி - நபார்டு மூலம் வழங்கப்படும்.
*கிராம வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த நிதி வழங்கப்படும். 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
*கிஷான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புவர்கள் சேர்ப்பு.
*விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் சுமார் 2.5 கோடி பேருக்கு கிஷான் கிரடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கடன்.
*6 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான வருட ஊதியம் பெறுவோர்களுக்கான நலத் திட்டம் அறிவிப்பு.
*நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்குவதற்கான கடன் வசதி 2021ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும்.
*இதுவரை 3.3 லட்சம் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன. கடன் கால நீட்டிப்பால் 2.5 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும்.
*அனைத்து துறைகளிலும் பெண்கள் இரவு ஷிப்ட் பணியாற்ற அனுமதி
*குறைந்தபட்ச ஊதியம் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப்படும்.
*அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ சோதனையை கட்டாயம்.
*பத்து ஊழியர்களுக்கும் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. பலன்களை வழங்கப்படும்.
*சாலையோர வியாபாரிகள் எளிதாக கடன் பெற விரைவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
*ரூ.10 ஆயிரம் துவக்க நிலை செயல்பாட்டு மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
No comments:
Post a Comment