அக்னிப்புரட்சி (16.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (16.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (16.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.

உலக நாடுகளை சேர்ந்த 308,611 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால்4,626,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,757,297 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 45,008  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கியது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை - 85,940 பேர் கொரோனா வைரஸில் இருந்து 30,153 மீண்டுள்ளனர்.

2,752 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால்  உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு - சீனாவை விட இந்தியாவில் அதிகரிப்பு.

*தமிழ்நாட்டில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்வு. சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6278ஆக அதிகரிப்பு.

மகாராஷ்டிராவிலிருந்து வந்த 81 பேருக்கு இன்று கொரோனா உறுதி.
பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர்
இன்று உயிரிழப்பு. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக புதிதாக பாதிப்பில்லை.

திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை.

இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் 3,538 உயர்வு

*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத எதிரியை அழிக்க இந்தியாவுடன்  அமெரிக்கா இணைந்து செயல்படும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

*உத்தரப்பிரதேசத்தில் இரு லாரிகள் மோதல்- 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி. ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு லாரி மூலம் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் கள். அவ்ரா பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 24 பேர் பலி.

*சென்னை திருமழிசை சந்தையை விட பலமடங்கு அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவியதால், இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகர எல்லையில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தற்காலிகச் சந்தை தொடங்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து பொருட்களை வாங்கி வரும் சில்லறை வியாபாரிகளுக்கு, போக்குவரத்துச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திருமழிசையில் 8 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ தக்காளி நகர்ப்புறங்களில் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் சந்தையை விட சிறு கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் பல மடங்கு விலை உயர்வுடன் விற்பனையாகிறது.

*கோயம்பேடு தொழிலாளர்கள் குணமடைந்து வருகின்றனர்!
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட  413 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில், தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து 84 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து 28 பேரும், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 34 பேர் என மொத்தம் 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

*தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வக்ப் குழுக்களை அமைக்க தமிழ்நாடு வக்பு வாரியம் முடிவு இதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷா, ஓய்வுபெற்ற குடிமைப் பணியில் அதிகாரி அலாவுதீன், அரசு தலைமை காஜி முப்தி ஆலாஹூதின் முகம்மது ஆயூப் ஆகியோர் அடங்கிய குழு அமைப்பு

*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.5.75 கோடி அபராதம் வசூல்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4.78 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; 3.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் - காவல்துறை.

*பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 10ல் தொடங்கும் என தகவல்:
தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் ஏற்பாடுகள் தயார். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ஆம் தேதி துவங்கி, ஜூன் 10ல் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

*சலூன்களில் பணியாற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.2000 நிதி உதவி:

நலவாரியங்களில் உறுப்பினர்களாக இல்லாத முடிதிருத்தும் தொழிலாளர் களுக்கும் ரூ.2000 நிதி உதவி.
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவி இரண்டு தவணைகளாக வழங்கப்படும. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

*வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு.

தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம். வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு.

*நாட்டு மக்களுக்கு தற்போது பணம் தான் தேவை என்பதால் நேரடியாக அவர்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி மாற்ற வேண்டும். ஏழைகள், விவசாயிகள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் - ராகுல் காந்தி.

*தமிழக துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஆம்பன் புயல் உருவாக உள்ளதால் முன்னெச்சரிக்கையாக புயல் கூண்டு ஏற்றம்.

*தமிழகத்தில் இன்று 9 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக வேலூரில் 104.7 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவானது. தொண்டியில் 102.2, தருமபுரியில் 101.3, திருத்தணி, கடலூர், புதுச்சேரியில் தலா 101.1, சேலத்தில் 100.5, அதிராம்பட்டினம், பரங்கிப்பேட்டையில் தலா 100.4 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகி உள்ளது.

*18ம் தேதி முதல் 50% பணியாளர் களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளன. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு பேருந்து வசதி.
சொந்த செலவில் பயணிக்கும் வகையில் மாநகர பேருந்து இயக்கம்.

*தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்.
சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது 'ஆம்பன்' புயல். வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages