ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தில் 4 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
பிரதமர் கூறிய ''சுயசார்பு இந்தியா'' சவாலுக்கு நாம் தயாராக வேண்டும்.
பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்.
தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை.
வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிமுகம்.
கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாகின்றன.
நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம்
நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை
நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது
முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை அளிக்கப்படும்.
கனிம சுரங்கங்களில் தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்
சுரங்கங்களில் உள்ள கனிமப் பொருட்களை பிரித்து எடுக்க ஒருங்கிணைந்த ஒப்பந்தங்கள்
500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும்.
ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத் தப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும்.
பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% வரை அதிகரிப்பு.
இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும்
விமான நிலையங்களை மேம்படுத் துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு
இந்திய வான்வெளியை விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்து
வதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு
வான்வெளி பயன்பாடு கட்டுப்பாடுகள் தளர்வால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மிச்சமாகும்
வான்வெளி பயன்பாடு கட்டுப்பாடுகள் தளர்வால் பயண நேரம் குறையும், எரிபொருள் குறைவாக செலவாகும்
சில வெடிபொருள் தொழிற்சாலைகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன
பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவன மயமாக்கப்படும் - தனியார் மயம் அல்ல
சாதாரண குடிமகனும் வெடிபொருள் தொழிற்சாலை சார்ந்த பங்குகளை வாங்க முடியும்
ஆயுதங்களை இறக்குமதி செய்வதால் ஆகும் செலவுகள் இனி மிச்சமாகும்
பாதுகாப்புத்துறையிலும் தற்சார்பு அடைய வேண்டியது அவசியம்
சில குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுகிறது.
பெரும்பான்மையான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க கவனம் செலுத்தப்படும்
விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம்.
இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி.
செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டம்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். மின்விநியோகம் தனியார் மயமாக்கப் படுவதால் சேவை மேம்படும்.
மருத்துவமனை, பள்ளிகளை கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
சமூக கட்டமைப்பு திட்டங்களுக்கு சுமார் ரூ.8,100 கோடி ஒதுக்கப்படும்.
மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி. - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
No comments:
Post a Comment