மே - 1 தொழிலாளர் தின வாழ்த்து - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மே - 1 தொழிலாளர் தின வாழ்த்து - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

மே - 1 தொழிலாளர் தின வாழ்த்து - பாமக தலைவர் ஜி.கே.மணி 

உழைக்கும் மக்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் உலக அளவில் உருவாக்கப்பட்டதுதான் தொழிலாளர் தினம்.  12 முதல் 18 - மணி நேரம் வரை வேலை செய்து வந்ததொழிலாளர்கள் அடக்குமுறை உள்ளிட்ட அனைத்திலிருந்தும் பாதுகாக்க பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா, பிலடெல்பியா, பென்சில்வேனியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 1890 - ஆம் ஆண்டு மே 1 ஆம் நாள் உலக அளவில் தொழிலாளர் தினம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முதலில் சென்னையில் தான் 1923 - ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் அருகில் சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது.
             
ஆனால் நம்நாட்டில் இன்றளவும் தொழிலாளர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. கடுமையான வறட்சியினால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மிகுந்த வேதனையில் வாடிக் கொண்டுள்ளனர்.
             
மத்திய - மாநில அரசுகளின் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 10, 15 - ஆண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளர் முறை - குறைந்த அளவு ஊதியம் - வேலை நிரந்தரமில்லை - பாதுகாப்பில்லை.
             
தனியார் தொழில் நிறுவனங்கள் பலவற்றிலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை. இதற்கு முடிவு வேண்டாமா? தொழிலாளர் உரிமை, பாதுகாப்பு எங்கே? மத்திய - மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
              
அனைத்து வகையான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அனைவரும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு பெற்று தங்கள் குழந்தைகள் உயர்கல்வி  பெறச் செய்து குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் நெஞ்சார்ந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages