அக்னிப்புரட்சி (25.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (25.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (25.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3.56 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

இதுவரை 24 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

30 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

63 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இறப்பு விகிதம் 14 சதவீதமாக உள்ளது.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868லிருந்து 1,38,845ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441லிருந்து 57,721ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரிப்பு.

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8324லிருந்து 8731 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 7 பேர் உயிரிழப்பு மொத்தம் 118 பேர் உயிரிழந்துள்ளனர். - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

*கொரோனா பாதிப்பு - சென்னை ராயபுரம் மண்டலத்தில் 1981 பேர் பாதிப்பு:

கோடம்பாக்கம்- 1460,
திரு.வி.க.நகர்- 1188.
தேனாம்பேட்டை -1118, தண்டையார்பேட்டை- 1044, அண்ணாநகர்- 867.
சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

*சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,118 கன அடியில் இருந்து 1,889 கன அடியாக குறைந்துள்ளது:

அணையின் நீர்மட்டம் 100.43 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 65.40 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.7.63 கோடி அபராதம் வசூல் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,26,507 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; 4,20,688 வாகனங்கள் பறிமுதல். பொதுமுடக்க உத்தரவை மீறியதாக இதுவரை 4,94,770 வழக்குகள் பதிவு. - காவல்துறை.

*தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின:
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர், சிவகளையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின.

ஆதிச்சநல்லூரில் 6ஆம் கட்ட அகழாய்வும், சிவகளையில் முதல்கட்ட அகழாய்வு பணிகளும் தொடங்கியுள்ளன.

*மே 31ம் தேதி பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்தவுள்ளார்..

*ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரானோ  நோய்த்தொற்றுடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் - தலைமை செயலாளர்.
சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல்.ஸமாவட்ட ஆட்சியர்களுக்கு,  தலைமைச் செயலாளர் உத்தரவு.

*இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் (96) மரணம்
ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி போட்டிகள் மூன்று முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தவர் மொகாலி நகரில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

*4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன். - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கொரோனா பாதிப்பால் அமெரிக்கா முடங்கியுள்ளதால் 2020 ஆம் ஆண்டுக்கான தனது முழு சம்பளத்தையும் அரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

*✈️சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கியது.
முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது.

முதல் விமானமாக இன்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று  தமிழக அரசு கூறியுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org - பதிவு செய்து இ-பாஸ் பெறலாம்.

*முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும்:

டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.
திமுக தலைவர்- மு.க.ஸ்டாலின்.

*துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்; மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்.

*தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்- வானிலை மையம். மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் அனல் காற்று வீசும். 5 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகும்.
பொதுமக்கள்  வெளியே  வருவதை தவிர்க்க வலியுறுத்தல்.

*'தூத்துக்குடியில் நாளை பிற்பகல் முதல் விமான சேவை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு சென்னைக்கு விமான சேவை தொடக்கம். ஸசென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பகல் 12.35 மணிக்கு விமான சேவை. - விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம்.

*திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.

மும்பையில் இருந்து வந்த 30 பேர் , சென்னையில் இருந்து வந்த 5 பேர் உள்பட 39 பேருக்கு கொரோனா பாதிப்பு- மாவட்ட நிர்வாகம்.

தருமபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு பாதிப்பு.

செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்வு.

கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில்  கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432 ஆக அதிகரிப்பு - சுகாதாரத்துறை.

*சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தாமிரபரணி நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

*மருத்துவ பரிசோதனைகள் முடிந்து வீடு திரும்பினார் ஓ.பி.எஸ்.

சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஓபிஎஸ்.

*திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்கக்கூடாது - ஆந்திர அரசு உத்தரவு.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவு. பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம்விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages