தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-3
காலத்திற்கேற்ற கல்விக்கொள்கை தேவை ஏழை,நடுத்தர,பணக்கார குடும்பங்களுக்கு வெவ்வேறு வகையான கல்விமுறையில் மாற்றங்கள் அதாவது அனைவருக்கும் ஒரே தரமான,ஒரே சீரான,கட்டணமில்லாத, விளையாட்டுடன் கூடிய பாடத்திட்ட முறை_அது சமச்சீர் கல்வி_இதற்கு நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு,வாதாடி சமச்சீர்கல்வி சட்டமாக்கப்பட்டது. சமச்சீர்கல்வி என்ற வார்த்தை இந்தியாவில் முதன் முதலில் மருத்துவர் அய்யா அவர்களால் சொல்லப்பட்டது.அது வாதாடி சட்டமாக்கப்பட்ட நிகழ்வு கேட்பதற்கு மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும்.அதை பின்னர் குறிப்பிடுகிறேன்.
நுழைவுத்தேர்வு ரத்து(இன்றைய நீட் தேர்வு போன்றது).இதனுடைய வாதமும் நிறைவேற்றமும் தமிழ்நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் முக்கியமானதாகவே இருந்தது. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கல்வி கட்டணங்கள் வசூலித்ததை குறைக்க வாதாடி சீரமைத்தல், அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலிருந்து அரசுக்கல்லூரிகள் துவங்கப் படாமலிருந்ததை மாற்றி அரசுபொறியியல்,கலை_அறிவியல், பாலிடெக்னிக்கல்லூரிகள் துவங்கப்படல்_பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், பின்னர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கல்வி உதவித்தொகை அதிகரிப்பு சீருடை,அரசு உயர்நிலைப் பள்ளிகள்,மேல்நிலைப் பள்ளிகள்,அரசு கல்லூரிகள்,அரசு இலவச மாணவ_மாணவியர் விடுதிகள் போன்றவை துவங்க வலியுறுத்தப்பட்டு நிறைய இடங்களில் துவங்கப்பட்டது, தமிழ் வழிக்கல்வி (தமிழ் பயிற்று மொழி சட்டம்) தமிழ் வளர்ச்சிக்கு நிறைய ஆலோசனைகளும் நீண்ட கால விவாதங்களும் காரசாரமாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்தது. கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்க்கல்வித்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டது.கல்வி சீர்திருத்தங்கள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து வாதாடப்பட்டு வந்தது.
விவசாயத்திற்கு தொழில்துறை அந்தஸ்து வேண்டும்.குண்டூசி உள்ளிட்ட எந்த பொருள் உற்பத்தி செய்தாலும் அதன் விலை நிர்ணயம் செய்கின்ற அதிகாரம் உற்பத்தி செய்கின்றவனுக்கு உண்டு.ஆனால் விவசாய உற்பத்திக்கு விலை நிர்ணயம் இல்லை. விவசாயிக்கும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை.வாங்கி பயன்படுத்துகிற நுகர்வோருக்கும் கூடுதலான விலை.இது மிக முரண்பாடானது.கோதுமைக்கு மத்திய அரசு ஆதார விலை அதிகம் கொடுப்பதை போல நெல்லுக்கு கொடுப்பதில்லை.விவசாயிகள் தொடர்ந்து நட்டத்தையும்_கடனையும் சந்தித்து வருவதால் நெல்,கரும்பு, மக்காச்சோளம்,தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திக்கும் கட்டுபடியான விலை வேண்டும். விற்பனை மையங்களும்,குளிர்பதன கிடங்குகள் எல்லா ஒன்றியங்களிலும் துவங்கபடுதல் வேண்டும்.வாழை விற்பனைக்கு பெங்களூரில் உள்ள சஃபல் மார்க்கெட்டை போல் திருச்சியில் துவங்கப்பட வேண்டும்.விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் வேண்டுமென்ற நீண்ட விவாதம் நடைபெற்று, அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு, பல மாநிலங்களுக்கு சென்று வந்த பின் "உழவர்சந்தை" உருவாக்கப்பட்டது.இதன் நடவடிக்கை விசித்திரமானது. விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு சோதனை வந்தபோது தடுத்து நிறுத்தல், விவசாய கடனுக்கு வட்டி குறைப்பு, வேளாண்துறைக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கீடு_நெல்லுக்கு கூடுதலான ஆதார விலை_அதிக இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டது.
கர்நாடகாவிடமிருந்து காவிரி உரிமை பிரச்சினையில் நிறைய விவாதம்,மத்திய அரசுக்கு தீர்மானம்,கேரள முல்லைப்பெரியாறு அணை 136அடியிலிருந்து 142அடியாக உயர்த்த,பின்னர் 152 அடியாக உயர்த்த வேண்டுமென்றது. பாலாற்றில் ஆந்திரா குப்பம் அடுத்து கணேசபுரத்தில் அணை கட்டுதல் உள்ளிட்ட சில இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தப்பட்டது_காவேரி,பாலாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டுதல்_ மேட்டூர் அணை உபரி நீர் திட்டம்,அத்திக்கடவு_அவினாசி திட்டம்,கந்தன் கால்வாய்த்திட்டம், காவிரி_குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட நிறைய மாவட்டங்களுக்கான பாசனத்திட்டங்கள் விவாதிக்கப்பட்டு அப்போது திட்டமிடப்பட்டது (தற்போது நிறைவேறி வருகின்றது).நிறைய பாசன கால்வாய்கள் தூர்வாரி ஆழப்படுத்துதல்_நீட்டித்தல்,ஏரிகள் தூர்வாருதல்,நிறைய மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றல்_தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்,கேரளா நெய்யாற்றங்கரை இடதுகரை கால்வாய் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பழைய ஒப்பந்தப்படி வழங்கியது.
மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைத்திட மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி துவங்கப்பட வேண்டும் என வாதாடி தர்மபுரி, விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் துவங்கப் பட்டது,அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவ கல்லூரி வீதம் துவங்கபட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட,மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் C.T ஸ்கேன், M.R.I ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் தேவை, மருத்துவமனைகளில் தரமான எல்லா மருந்துகளும் கிடைக்கச் செய்தல்_எல்லா அறுவை சிகிச்சைகளும் இலவசமாக மேற்கொள்ளுதல், சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள்,செவிலியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமனம் செய்தல், குறிப்பிட்ட இடங்களில் புதிய அரசு மருத்துவமனைகள் துவங்குதல் உள்ளிட்டவைகள் வாதாடி நிறைவேற்றப்பட்டன. அப்போலோ மருத்துவமனைபோல் தரமான மருத்துவ வசதி எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படுவது நோக்கமாக இருக்க வேண்டும்.இதற்கு மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்களின் சாதனையே சாட்சி. காவல்துறையினர்,அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,சத்துணவு பணியாளர்கள்,அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்,சாலைப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களின் கோரிக்கைகள் வாதாடி அவ்வப்போது நிறைவேற்றப்பட்டது.
இன்று ஒரு சில மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் சாதனைகள் நாளை தொடரும்.
தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-3
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment