அக்னிப்புரட்சி இன்றைய (31.05.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனா தொற்று
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 27,34,548 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரிப்பு.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனா தொற்று
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,82 லட்சமாக ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரிப்பு.
*தமிழகத்தில் கொரோனா நிலவரம்!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது! இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333ஆக உயர்வு!
சிகிச்சையில் உள்ளவர்கள் - 9,400
குணமடைந்தவர்கள் - 12,757
இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு இதோடு சேர்த்து மொத்தம் - 173 ஆக அதிகரிப்பு.
மொத்த பரிசோதனைகள் - 4,91,962
இன்றைய பரிசோதனைகள் - 12,807
தமிழகம் - கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்!
சென்னை கொரோனா நிலவரம்!
மொத்த பாதிப்பு - 14,802
இன்று உறுதி - 804
சிகிச்சையில் உள்ளவர்கள் - 6,781
குணமடைந்தவர்கள் - 7,891
உயிரிழப்பு - 129 ஆக அதிகரிப்பு.
*விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை. இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
*பஞ்சாபில் பொதுமுடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு. பஞ்சாபில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு.
*மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு.
மேற்கு வங்கத்தில் ஜூன் 15 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு.
*உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன்.01 ஆம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை தொடக்கம்.
ஜூன்.01 முதல் காலை 10.30 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.45 வரை இருதரப்பும் விருப்பம் தெரிவித்தால் காணொலியில் வழக்குகள் விசாரணை.
*அமெரிக்கா விண்வெளி சாதனை! 2 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்க ராக்கெட்!
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஸ்பேஸ்எக்ஸ்' என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்தது. இதற்காக நாசாவை சேர்ந்த டக்ளஸ் ஹர்லி மற்றும் ராபர்ட் பெஹன்கென் ஆகிய வீரர்கள் தேர்வாகினர். நள்ளிரவு 1:00 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
முன்னதாக கேப் கேனவராலில் பலத்த சூறாவளி வீசியதால் ராக்கெட் ஏவுவது தாமதமானது. 2011ல் இருந்து தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பாத நாசா 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக தற்போது மனிதர்களை அனுப்பியுள்ளது.
*ஊரடங்கு தளர்வுகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருமா? தமிழக அரசு இன்று அறிவிக்க வாய்ப்பு.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டல்களின் படி தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு குறித்த புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்க உள்ளதாக தெரியவருகின்றது.
*தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
ஜூன் 5ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
*கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.
தென் கொரியாவிலிருந்து கொரோனா பரிசோதனைக்காக மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன- தமிழக சுகாதாரத்துறை.
*கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்தமானில் சிக்கித்தவித்த 43 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 161 தொழிலாளர்கள், 43 மீனவர்கள் கப்பலில் சென்னை வருகை. தமிழகம் திரும்பிய மீனவர்கள்,தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு.
*ரயில்களில் பயணிக்கவும் இ-பாஸ் கட்டாயம்.
மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம். தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்- தெற்கு ரயில்வே.
*புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் நாராயணசாமி பேட்டி:
புதுச்சேரியில் 45 பேர் கொரோனா நோயால் பாதிப்பு.
ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம்.
மத வழிபாட்டு தளங்களை ஜூன் 8 ம் தேதி முதல் திறக்கலாம். மத்திய அரசின் முடிவை நடைமுறைப் படுத்துகிறோம்.
ஓட்டலில் ஜூன் 8 ம் தேதி முதல் அமர்ந்து சாப்பிடலாம். இரவு 9 மணி வரை சமூக இடைவெளியுடன் ஓட்டல்கள், மால்கள் இயங்கும்.
அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் பேசி பள்ளி-கல்லூரிகளை துவங்குவது குறித்து அரசு ஆலோசித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும்.
திரையரங்கு,பார்கள்,நீச்சல் குளம் திறக்கப்படாது.
நடைபயிற்சிக்காக பீச், பூங்கா திறக்கப்படும்.
அத்தியாவசியமின்றி வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்கவேண்டும்.
மருத்துவம், விவசாயம், தொழிற்சாலைக்கு வருபவர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்க அமைச்சரவை முடிவு.
இது பற்றி விழுப்புரம்,கடலூர் ஆட்சியர்களுடன் அதிகாரிகளின் பேசி எந்த முறையில் அனுமதிப்பது என முடிவு செய்யப்படும். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசினார்.
*பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5,000-ம் என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
மருத்துவ முதுநிலை படிப்புகளில் ஓ.பி.சி இடஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டதை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின்மோட்டார் வைக்கும் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்- திமுக கூட்டணி.
*கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை.
சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை.
பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை தேடும் போலீசார்.
*குமரியில் நாளை பேருந்துகள் இயங்காது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. பேருந்துகள் இயங்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும்.
*திருச்சி: பூலாங்குடி காலனியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.
No comments:
Post a Comment