தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்களின் அனுபவங்கள் பகுதி - 4 - Agnipuratchi

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்களின் அனுபவங்கள் பகுதி - 4

Share This

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்களின் அனுபவங்கள் பகுதி - 4 
   
முழு மதுவிலக்கு வேண்டி நீண்ட காலம் வாதாடிய வரலாறு உண்டு.  மக்களை அழிக்கும் மது ஒழிக்கப்பட வேண்டும்.உயிரிழப்பு,சாலைவிபத்து, இளம்விதவைகள் அதிகரிப்பு, குடும்பமே சீரழிவு அரசாங்க வார்த்தையிலே மது நாட்டிற்கு வீட்டிற்கு உயிருக்கு கேடு என்றும் மதுவின் மூலம் வரும் வருவாயை விட அரசுக்கு அதிக வருவாய் பெறுவதற்கு வேறு வழிமுறைகளையும் சுட்டிக்காட்டியும், தொடர்ந்து வாதாடியும் மதுவிலக்கு நடைமுறைக்கு வரவில்லை.இந்த வேதனையை சொல்ல வார்த்தையே இல்லை.லாட்டரியின் கொடுமையினால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி வாதாடி,தமிழ்நாட்டில் லாட்டரிச்சீட்டு ஒழிக்கப்பட்டது.பின்பு லாட்டரி சீட்டு விற்பனை மீண்டும் துவங்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் கடுமையாக எதிர்த்து வராமல் தடுக்கப்பட்டது.மது, லாட்டரி ஒழிப்பு விவாதம் கவனத்தை ஈர்க்கும்.பின்னர் விவரங்களை குறிப்பிடுகிறேன்.    
   
இலங்கைத்தமிழர் பிரச்சனை_தனி ஈழம்தான் தீர்வு என நீண்ட நாட்கள் கருப்புச்சட்டை அணிந்து வாதாடப்பட்டது.இதில் மத்தியரசை வலியுறுத்தி தீர்மானம் ஈழ விடுதலைப்போராட்ட தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தபோது,அதை எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி உள்ளிட்டோர் ஆதரித்ததை சுட்டிக்காட்டி, கடுமையாக  எதிர்த்து வாதம் செய்தேன்.இதில் பா.ம.க வின் வாதமே தமிழ் இன உணர்வோடு நெஞ்சை உலுக்கும் வகையில் உணர்ச்சிபூர்வமாக இருக்கை மீது ஏறி நின்று ஆவேசமாக வாதாடினேன். அப்போது அவையே கொந்தளிப்பாக காணப்பட்டது.இதை பின்னர் குறிப்பிடுகிறேன்.     
    
அப்போது நடைபெற்ற தனியார் மணல் கொள்ளைக்கு தடை விதித்து,அரசே நேரடியாக மணல் விற்பனை செய்தால்,தாறுமாறாக மிக ஆழமாக மணல் எடுப்பது குறைக்கப்பட்டு ஆறுகள் பாதுக்காக்கப்படும்,மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கும்,அரசுக்கும் வருவாய் கிடைக்குமென புள்ளி விவரங்களோடு வாதாடியதை  அன்று முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மணல் விற்பனை அரசுடமையாக்கப்பட்டது.(ஆனால் அது பின்னர் விஸ்வரூப கொள்ளையாக மாறிவிட்டது). இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டியும்,ஒருமுறை கன்னட மொழியில் வாதாடியும்,மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனைப்படி 13 அருந்ததியர் சங்கங்களை நான் அழைத்து கூட்டம் நடத்தி பின்னர் அவர்களோடு முதலமைச்சரை நேரில் சந்தித்து நீண்ட விவாத்திற்கு பிறகு இடஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது.இது தமிழக வரலாற்றில் பா.ம.க வின் செயற்கரிய சாதனையே.
   
அரசின் நலத்திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடையவும், வளர்ச்சிக்காகவும்,நிர்வாக நலன் கருதியும் பெரிய மாவட்டங்களான வேலூர்(மூன்றாக),விழுப்புரம், தர்மபுரி,சேலம்,காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை, கடலூர்,பெரம்பலூர்,கோயம்புத்தூர்,மதுரை,திருநெல்வேலி,திருச்சி, தஞ்சாவூர் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென நீண்டகாலம் வாதாடி அரசு கொள்கை முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரியலூர், கிருஷ்ணகிரி,திருப்பூர் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.(தற்போது சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன).

தமிழ்நாட்டில் பரவலாக பெரியதாக இருக்கிற வட்டங்கள்(தாலுக்கா), ஒன்றியங்கள்,ஊராட்சிகள் போன்றவை பிரிக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டு வரிசையாக பிரிக்கப்பட்டு வந்தன. பெரிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உருவாக்கப்பட வேண்டும்,பெரிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டதோடு வேலூர், ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. பின்னர் தூத்துக்குடி,தஞ்சாவூர் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. பெரிய மாநகராட்சி சென்னை பிரிக்கப்பட்டு சென்னை,தாம்பரம், அம்பத்தூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் உருவாக்கப்பட வேண்டுமென முறையிட்டும் நடக்கவில்லை.      
    
உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழி தமிழ் வேண்டுமென வாதாடி,மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுதல் குழந்தை பெயருக்கு முன் தாய் பெயரின் முதல் எழுத்து தலைப்பெழுத்தாக (இன்ஷியல்) போடுதல் உள்ளிட்டவைகள்.
   
காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு 5,000ஏக்கர்,10,000ஏக்கர் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தி குறைந்த விலைக்கு வழங்கும் சிறப்பு பொருளாதார மண்டலம்(அய்யா தலைமையில் போராட்டம்) அமைக்கும் திட்டம் பல இடங்களில் துவங்கியதை வாதாடி தடுத்து நிறுத்தப்பட்டது. காற்றாலை,சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டுதல் மின் கட்டணம் உயர்த்த கூடாது என்றும் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல்ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் போன்ற மாவட்டங்களில் வெளியேறும் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மானியம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.
தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது, நெசவாளர்களுக்கு 100யூனிட் வரை இலவச மின்சாரம் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் நிதி உதவி மீனவர்கள் படகுகளுக்கு மானிய விலையில் டீசல் மீன்பிடி தடைகால உதவித்தொகை ஆறு,ஏரி, குள மீனவர்களுக்கு வலை,பைபர் பரிசல் மானியம்,இலவச வீடு கடற்கறை பகுதிகளில் மண் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதையும்,படகு வலைகள் சேதப்படுத்துவதையும், கடத்தப்படுவதையும்,கைது செய்யப்படுவதையுமும் அவ்வப்போது வாதாடி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை  இளைஞர்கள் விளையாட விளையாட்டுத்திடல் பெண்களுக்கு பாதுகாப்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூடுதல் நிதி கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள்,விதவைகள், முதியோர்,மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு உதவித் தொகை அதிகரிப்பு நீண்டநாள் விவசாயம் செய்துவரும் பட்டா இல்லாத நிலங்களுக்கு வாதாடி பட்டா வழங்கப்பட்டது. நீண்ட காலம் வீடு கட்டி குடியிருக்கும் மனை பட்டா இல்லாத வீடுகளுக்கு வாதாடி பட்டா வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 70சதவீதம் குடிசைகள் வட மாவட்டங்களில் உள்ளன. குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென வாதாடி, தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டு அன்று முதல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.இப்படி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்றத்தில் வாதாடி ஏராளமான சாதனைகள் படைத்தது. சாதனைகளையே தொடர்ந்து குறிப்பிடுவதை சற்று மாற்றி

நாளை முதல் வெவ்வேறு நிகழ்வுகளாக குறிப்பிடவுள்ளேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages