மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் பாதிப்பு அதிகமானது என்று கூறினார்.
இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகுறது. மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை இல்லை. விவசாய விளை பொருள் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி.
கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது. நஷ்டத்தை காரணம் காட்டி கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு சிறப்பாக செயல்படவில்லை என தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.
விவசாயிகள் காய்கறிகளை சந்தைப்படுத்த நடவடிக்கை.
அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல.
பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த பிற இடங்களில், 50 சதவீத தொழிலாளர் களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம். தமிழகத்தில் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்கு பின் திறக்கலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்க வேண்டும். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
No comments:
Post a Comment