அக்னிப்புரட்சி இன்றைய (01.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,63 லட்சத்தை தாண்டியது
பலியானோர் எண்ணிக்கா 3,75 லட்சம் பேராக உள்ளது
இதுவரை உலகளவில் 28,46 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
53,409 பேர் மருத்துவமனைகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
* அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,37 லட்சத்தை தாண்டியது.
பலியானோர் எண்ணிக்கா 1,06 லட்சம் பேராக உள்ளது
இதுவரை உலகளவில் 5,99 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
* பிரேசில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,14 லட்சத்தை தாண்டியது.
பலியானோர் எண்ணிக்கா 29,341 பேராக உள்ளது
இதுவரை உலகளவில் 2,06 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
*ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,05 லட்சத்தை தாண்டியது.
பலியானோர் எண்ணிக்கா 4,693 பேராக உள்ளது
இதுவரை உலகளவில் 1,71 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
*ஸ்பெயின் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86 லட்சத்தை தாண்டியது.
பலியானோர் எண்ணிக்கா 27,127 பேராக உள்ளது
இதுவரை உலகளவில் 1,96 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
*பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74 லட்சத்தை தாண்டியது.
பலியானோர் எண்ணிக்கா 38,489 பேராக உள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 1,90 லட்சம் ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164 லிருந்து 5,394 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984 லிருந்து 91,819 ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று, பாதிப்பு எண்ணிக்கை 23495 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184ஆக அதிகரிப்பு - தமிழக சுகாதாரத்துறை.
சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
இதுவரை இல்லாத அளவாக சென்னையில் இன்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்தது.
இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
*ரிசர்வ் வங்கி பெயரில் போலி இ-மெயில் முகவரிகள் செயல்படுவதாக வங்கி நிர்வாகம் எச்சரிக்கை.
rbi.org.in என்பதே வங்கியின் சரியான இ-மெயில் முகவரி எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம்.
*பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி.
தமிழகம் முழுவதும் 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை.
*சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமனம்.
பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆணை.
*மும்பையை நோக்கி நகர்ந்து வரும் நிசார்கா புயல்
1891ம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்ட்ராவை நெருங்கி வரும் முதல் ஜூன்மாத வெப்ப மண்டல புயல் இது என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலுக்கு நிசார்கா எனப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
*அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக மும்பை கரையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. நாளை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3ம் தேதி பிற்பகலுக்குள் புயல் வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மகராஷ்ட்ரா அரசு எச்சரித்துள்ளது.
*அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், நிசர்கா என்று அழைக்கப்படும்- இந்திய வானிலை ஆய்வு மையம்.
*தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கின
பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
பயணிகள் பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்படு கிறார்கள்
பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்டது
டிரைவர், கண்டக்டர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது.
*கொரோனா அறிகுறியுடன் வரும் மாற்று திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்று திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம்.
மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை.
*சானிடைசர் தெளித்தபோது பைக்கில் தீ பற்றியது - அகமதாபாத்தில் பரபரப்பு காட்சி!
அகமதாபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற அரவிந்த் மில் என்ற ஜவுளி உற்பத்தி தொழிற்சாலை ஊரடங்கு தளர்வு காரணமாக திறக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரவிந்த் மில்லுக்கு வந்து செல்லும் வாகனங்கள் மீது சானிடைசர் தெளிக்கப்பட்டது. இருசக்கர வாகனம் செயல்பாட்டில் இருந்தபோது, சானிடைசர் தெளித்ததால் தீப்பற்றி பெரும் பதற்றம் நிலவியது.
VIDEO: https://twitter.com/TheSeithikathir/status/1267316609305067521?s=19
*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.9.31 கோடி அபராதம் வசூல்:
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,64,440 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; இதுவரை 4,38,720 வாகனங்கள் பறிமுதல்; 5,28,459 வழக்குகள் பதிவாகின. - காவல்துறை.
*69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது- உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். 69% இடஒதுக்கீடுக்கு அனுமதி தரும் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் தகவல்.
*கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் 7-வது இடத்தில் இந்தியா. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலிக்கு அடுத்து இந்தியா.
*தமிழகத்திற்குள் ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு இ-பாஸ் பெற tnepass.tnega.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக் கலாம்.ரயில் டிக்கெட் எடுத்த பிறகு இணையதளத் தில் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்யும் போது பிஎன்ஆர் நம்பர் கேட்கப்படுகிறது.
*சென்னையில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை நிறுத்தியது மாநகராட்சி.
சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவு நிறுத்தம்.
சென்னையில் மட்டும் 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
விலையில்லா உணவு குறித்த அறிவிப்பு வராததால் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்.
ஊரடங்கு காலத்தில் சென்னையில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் விலையில்லா உணவை உண்டு பயன் பெற்றதாக தகவல்.
*மதுரை : பெத்தானியபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக வந்த புகாரில் கடைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ. கடையில் இருந்த பெரியசாமி என்பவர் கைது - விற்பனையாளர் தாமோதரன் பணியிடை நீக்கம்.
*கபசுர குடிநீரை குடிக்க அறிவுரை வழங்கியதால் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டாரா.? திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா? - திருத்தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உள்துறை செயலாளர், காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு.
*கர்நாடகாவில் உள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடி பேச்சு:
வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி; முன்கள பணியாளர்களின் சேவை அளப்பரியது.
இந்திய மருத்துவ பணியாளர்களை உலகம் நன்றி உணர்வோடு நோக்கி வருகிறது.
புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் சுகாதாரத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுகிறது.
தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் - பிரதமர் மோடி பேசினார்.
*13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடியில் கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங் களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.
ரூ.235 கோடியிலான ஐடி பூங்காவிற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்.
*சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க படுகிறது. கொரோனா பரவலை தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது.
தளர்வுகள் அதிகரிக்கும் போது நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லை யென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும்.
சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை. சென்னை யில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது - பிரகாஷ்.
*பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்த சம்பவம்.
பாகிஸ்தான் அதிகாரி இந்தியா பற்றிய தகவல்களை திரட்டும் வீடியோ வெளியானது. கையும் களவுமாக சிக்கிய பாக்., அதிகாரிகள் 2 பேரை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.
டெல்லி கரோல் பாக்கில் உள்ள உணவகம் ஒன்றில் அமர்ந்து உளவு வேலைக்காக தகவல்களை திரட்டிய போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்.
விசா பிரிவில் பணியாற்றி வந்த அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான் உளவு பார்த்த போது சிக்கினர்.
*ஜூன் மாத பொதுமுடக்கத்திலாவது கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் முயற்சிக்க வேண்டும். அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த எதிர்க்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எந்த பயனும் ஏற்படாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை.
*வருவாய்த்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பு. செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
*சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பு ஏற்பாடுகள் தீவிரம்; ஒரு வாரத்தில் கடைகள் திறக்க வாய்ப்பு என தகவல்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறக்க வாய்ப்பு.
குறைவான நேரம் மட்டுமே கடைகளை இயக்கவும் முடிவு என தகவல்.
கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
*காட்மேன் இணையதள தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.
குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரிப்பதாக அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை-தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு. காட்மேன் இணைய தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக் கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment