அக்னிப்புரட்சி இன்றைய (08.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 2,46,628லிருந்து 2,56,611ஆக உயர்வு.
உயிரிழப்பு 6,929லிருந்து 7,135ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,293லிருந்து 1,24,095ஆக உயர்வு.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,149 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 23,298 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 17 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 286 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 528 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 17, 527 பேர் குணமடைந்துள்ளனர்.
*உருமாற்றம் கொண்ட கொரனா - சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!
இந்தியாவில் பரவி வரும் கொராணோ வைரஸ் தொற்று தற்போது அதிக வீரியம் கொண்ட கொராணா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாறி பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பரவியதாக கருதப்படும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 41% பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
இந்த வைரஸ் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கை தேவை என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
*புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன- சமூக இடைவெளியுடன் வழிபாடு.
மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குழந்தைகள், முதியவர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை.
*அரசின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். - அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னையில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. - அமைச்சர் ஜெயக்குமார்.
*நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு - அறிக்கை தாக்கல்:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
*ஒடிசாவில் விமான விபத்து: 2 பேர் பலி:
ஒடிசாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில், தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி அனிஷ் பாத்திமா, பீகாரை சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் உயிரிழப்பு.
*புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு:
கொரோனா பாதிப்பால் 75 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
*கொரோனாவால் பாதித்த 1,25,381 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
*சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் வெளியீடு:
ராயபுரம் மண்டலத்தில் 3859 பேருக்கு கொரோனா பாதிப்பு
தண்டையார்பேட்டை - 2835, தேனாம்பேட்டை - 2518, கோடம்பாக்கம் - 2431,
திரு வி.க.நகர் - 2167, அண்ணாநகர் - 1974.
5 மண்டலங்களில் 2 ஆயிரத்தை கடந்தது, கொரோனா பாதிப்பு.
*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.10.90 கோடி அபராதம் வசூல்:
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,99,315 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.
இதுவரை 4,55,375 வாகனங்கள் பறிமுதல்; 5,57,872 வழக்குகள் பதிவாகின. - காவல்துறை.
*நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் ரூ.306.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலங்கள், கட்டடங்கள் திறப்பு.
*பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே இ - பாஸாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம்.
பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும்.
மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும்.
டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பினார், அதுல்ய மிஸ்ரா.
*கடலூர் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 3 ஆக உயர்வு.
கடலூர் சரவணா நகர் பகுதியில் இருந்து கொரோனா பாதித்து சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 57 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு.
*தேர்வுத் துறை இணை இயக்குனருக்கு கொரானா:
10ம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத் துறை இணை இயக்குனருக்கு கொரோனா.
தர்மபுரியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார்.
தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல். தேர்வுத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் அதிர்ச்சி.
*தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்.
*முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு:
10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஆலோசனை. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிட வேண்டும் என ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்த நிலையில் சந்திப்பு. 10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.
*டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை: உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது போல் அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை என கூறிய நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர்.
*தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மனி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். - வானிலை ஆய்வு மையம்
*மு.க.ஸ்டாலின் ட்வீட்!
"சொந்தப் புத்தியும் இல்லை; சொல் புத்தியும் இல்லை" நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு covid-19 நோய்த் தொற்றுத் தடுப்பில் முற்றிலுமாக ‘ஃபெயில்’ ஆகியுள்ள நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் 'பாஸா - ஃபெயிலா' என்பதையறிவதற்காக தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டுவது, அதன் அக்கறையற்ற செயல்பாட்டையே காட்டுகிறது.
*9லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.
கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.
*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்தாண்டு நடத்தக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
*10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாணவரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்- சீமான்.
*இவ்வளவு ஆபத்தான சூழலில், அவசரமாக பொதுத்தேர்வை நடத்தி நாம் எதை சாதிக்கப் போகிறோம்? மாணவ, மாணவிகளின் உயிர்களை பணயம் வைத்து தேர்வு தேவையா? என்பதை அரசு சிந்திக்க வேண்டும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
*மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீவிர நோய் தொற்றில் இருந்த 54 வயது ஆண் 12 மணி நேரத்தில் குணமடைந்த நிலையில் பிளாஸ்மா முறையை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
*கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.
நடிகர் வரதராஜனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு. கொரோனா படுக்கை வசதி குறித்து தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை.
கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியுடன் அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக் கூடாது.
கொரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம்-அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்.
கண்ணுக்குத் தெரியாத வைரஸ்-ஐ எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம்.
இன்று 6 பேர் வெண்டிலேட்டரில் உள்ளனர். தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.
*கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை.
கோவையில் ஒரு பள்ளி, சென்னையில் 3 பள்ளிகள் குறித்து விசாரணை.
கொரோனா காலத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கெனவே அரசு உத்தரவு.
உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.
*10ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்க கோரிய வழக்கை வியாழக்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைப்பு 10ம் வகுப்பு தேர்வில் விரிவான அறிக்கை தாக்க செய்ய உத்தரவு.
*உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரம் - 3 பேர் பணியிடை நீக்கம்:
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம். - முதல்வர் நாராயணசாமி.
*தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பொதுத் தேர்வு ரத்து ஆகுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும், பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்தும் முதலமைச்சர் நாளை ஆலோசனை!
நாளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளோடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்!
*தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி. கொரோனா பரவும் நேரத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல - தெலுங்கானா முதலமைச்சர்.
*3650 நோய்த்தொற்றுகளுடன் கொரோனா பாதிப்பில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் போது, 33229 தொற்றுகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கும் தமிழகமும் அதை செய்வது தானே மக்கள் நலன் சார்ந்த, அறிவார்ந்த செயலாக இருக்கும்- டாக்டர் ராமதாஸ்.
*டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் உத்தரவு.
நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது. டெல்லி மக்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட நிலையில் ஆளுநர் உத்தரவு.
*தமிழகத்தை விட குறைவான பாதிப்புகளை கொண்ட தெலங்கானா அரசு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா? - திமுக தலைவர் ஸ்டாலின்.
*சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ?.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 6 அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்.
சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 38,198 ஊழியர்கள்.
சென்னையில் இதுவரை 1.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் இயங்கிவரும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 200 ஆக அதிகரிக்கப்படும். 82 லட்சம் பேர்களுக்கு ஓமியோபதி மருந்து கொள்முதல் செய்ய ஆணை.
*கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது - ரேலா மருத்துவமனை.
இன்று காலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.
ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன.
ஜெ.அன்பழகனின் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன - ரேலா மருத்துவமனை.
No comments:
Post a Comment