அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2020) முக்கிய செய்திகள்.

*இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 2,76,583லிருந்து 2,86,579 ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745லிருந்து 8,102 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் 1,35,206லிருந்து 1,41,029 ஆக உயர்வு.

கொரோனா பாதித்த 1,37,448 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பட்டுவருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716ஆக உயர்வு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் உயிரிழப்பு. இதுவரை தமிழகத்தில் மட்டும் - 349 பேர் உயிரிழப்பு.
கடந்த 6 நாட்களில் 117 பேர் உயிரிழப்பு.

*'குழந்தைகள் வருமானம் நாட்டிற்கு அவமானம்' என்பதை உணர்ந்து குழந்தைகளின் உரிமைகளை மதித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படு வதையொட்டி முதல்வர் வேண்டுகோள்.

*10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் நிலை குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.ஸமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சலுகை குறித்து முதல்வர் அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை -முதல்வர் பழனிசாமி.

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படு கின்றன உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்.

கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*ஐபிஎல் போட்டியை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித்தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது-பிசிசிஐ தலைவர் கங்குலி.

*புதுச்சேரியில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 157 ஆக அதிகரிப்பு.

*இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப் பில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை:

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது.

இந்தியாவும் கொரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறது.
இந்த உலகம் நம்பிக்கையான கூட்டாளியை எதிர்நோக்கி வருகிறது.
இந்தியாவுக்கு அதற்கான வலிமையும், ஆற்றலும் உள்ளது.

கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால் களையும் இந்தியா சந்தித்து வருகிறது.

இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருகிறது.

பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

நமக்கு ஒற்றுமையும், வலிமையும் தான் அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து-பிரதமர் மோடி.

*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.36,296க்கு விற்பனை.

*ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு- இஸ்ரோ தலைவர் சிவன்.

கொரோனா மற்றும் நிதி பிரச்னை காரணமாக திட்டம் ஒத்திவைப்பு என தகவல். இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு.

*சென்னையில் ஊரடங்கை கண்டிப் புடன் அமல்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனுத்தாக்கல். சென்னையில் தொற்று தீவிரமாக பரவுவதால் ஊரடங்கை தளர்த்தக் கூடாது என கோரிக்கை.

*தமிழகத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில்தர ஆணை. - உச்சநீதிமன்றம்.

*மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவு.

இடஒதுக்கீடு தொடர்பாக பாமக, அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு. இட ஒதுக்கீடு உரிமை, ஆனால் அடிப்படை உரிமை ஆகாது - உச்சநீதிமன்றம் கருத்து.

*'முதுநிலை மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி திமுக சார்பில் வழக்கு முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஓ.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு.

*கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை.

இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் - மாநகராட்சி ஆணையர்.

*சென்னையில் கொரோனா பாதித்தோர்,தனிமைப்படுத்தப் படுவோருக்கு உதவ 6,000 பணியாளர் கள் ஈடுபடுத்தப்படுவர்.

*டெல்லி ஜும்மா மசூதி இன்று முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மசூதி மூடப்படுகிறது.

*கொரோனா பரிசோதனைக்காக தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை. வாரம் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages