12 நாள் முழு ஊரடங்கு முடிந்த பின்னர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையும். - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி
சென்னை: 12 நாள் முழு ஊரடங்கு முடிந்த பின்னர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக சென்று பரிசோதனைகள் செய்வது, மருத்துவ முகாம்கள் என பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தினந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம்கள் பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது. நேற்று முன்தினம் நடந்த மருத்துவ முகாமில் 36,071 பயனடைந்துள்ளனர். வீட்டு தனிமைக்காக புதிய திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து தனிமைபடுத்துபவர்களை கண்காணிக்க உள்ளோம். தன்னார்வலர்களுக்காக தனியாக பதிவேடு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 14 நாட்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் நடவடிக்கை கண்காணிக்க வேண்டும். தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் நல்ல பலனளித்து வருகிறது. அண்ணா பல்கலைகழகத்தில் 2000 படுக்கைகளை இந்த வார இறுதியில் தயாராகும். ஐஐடியில் 1200 படுக்கைகளும், அத்திப்பேட்டை குடியிருப்பில் 4200 படுக்கைகள் கூடுதலாக தயாராகி வருகிறது.
மற்ற கட்டிடங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைகழகத்தின் விடுதிகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் 12 நாள் ஊரடங்கில் பல நன்மைகள் கிடைக்கும். சென்னையில் 10 சதவீத வாகன போக்குவரத்து தான் இயக்கத்தில் உள்ளது. ஊரடங்கிற்கு பின் பெருவாரியான தொற்று குறையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment