இந்தியா திருநாட்டின் 7 எல்லை நாடுகளில் மொத்தம் நீளம் 22,623.7கி.மீ - Agnipuratchi

இந்தியா திருநாட்டின் 7 எல்லை நாடுகளில் மொத்தம் நீளம் 22,623.7கி.மீ

Share This

இந்தியா திருநாட்டின் 7 எல்லை நாடுகளில் மொத்தம் நீளம் 22,623.7கி.மீ

நம் இந்தியாவின் 7 எல்லை நாடுகளில் சீனா,பாகிஸ்தான்,நேபாளம் ஆகிய 3 நாடுகள் ஒரே சமயத்தில் எல்லைகளில் மோதல், பிரச்சினை - தலைசிறந்த இராணுவம் என்று உலக அளவில் பாராட்டுப் பெற்ற திறன்மிக்க நமது இந்திய இராணுவம் நாட்டை காக்கும்.7 நாடுகளின் எல்லை மொத்தம்15,106.7 கி.மீ நீளம்.கடல் எல்லை 7,517 கி.மீ நீளம். இந்தியாவின் எல்லை
மொத்தம் 22,623.7கி.மீ
           
நமது வலிமையான இந்திய நாட்டின் அண்டை நாடுகளாக சீனா, பாகிஸ்தான்,நேபாளம்,வங்காள தேசம்,மியான்மர்,பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழு நாடுகள் எல்லைகளை ஒட்டியுள்ளன. இவற்றில் இந்தியா - சீனா எல்லை 3, 488 கி.மீ.இந்தியா - பாகிஸ்தான் எல்லை 3, 323 கி.மீ, இந்தியா - நேபாளம் எல்லை 1,751 கி.மீ,இந்தியா - வங்காள தேசம் எல்லை 4,096.7 கி.மீ,இந்தியா - மியான்மர் எல்லை 1,643 கி.மீ,இந்தியா - பூடான் எல்லை 699 கி.மீ,இந்தியா - ஆப்கானிஸ்தான் எல்லை 106 கி.மீ ஆக மொத்தம் நில எல்லை 15,106.7 கி.மீ இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா,தெற்கே இந்தியப் பெருங்கடல்,மேற்கே அரபிக் கடல் என மொத்த கடல் எல்லை 7,517 கி.மீ. இந்தியாவின் மொத்த எல்லை 22,623.7 கி.மீ கொண்டுள்ள பெரிய நாடு.             
     
தற்போது ஒரே சமயத்தில்  சீனாவும் பாகிஸ்தானும் எல்லை தாண்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.நமது இந்திய இராணுவத்தில் சிலர் வீர மரணம் எய்தினாலும் தங்கள் உயிரை துச்சமென நினைத்து,தக்க பதிலடி கொடுத்து நமது நாட்டின் எல்லையை உயிராகக் காத்து வருகின்றனர்.நமது இந்தியாவின் உதவியை அனுபவித்து வரும் நேபாளம் தன் உள்நாட்டு அரசியலுக்காக,சுய நலத்திற்காக எல்லைப் பிரச்சினையை உருவாக்கி, அதன் நாடாளுமன்றத்தில் புதிய எல்லை வரைபடத்தை புதிதாக கிளப்பி வருகிறது.           
      
காலங்காலமாக வலிமைமிக்க நமது இந்திய இராணுவம் இந்நிலையில் உறுதியாக உள்ளது. தலைசிறந்த இந்திய இராணுவம் என்று உலக அளவில் பாராட்டுப் பெற்ற திறன்மிக்க நமது இராணுவம் போற்றுதலுக்குரியது.
      
திறன்மிக்க நமது இராணுவம் நாட்டின் எல்லையை காக்கும். நாட்டை காக்கும் நமது இராணுவ வீரர்களை போற்றுவோம்...தியாகம் வெல்லட்டும்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages