அக்னிப்புரட்சி இன்றைய (14.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனா தொற்று:
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,59,557 ஆக அதிகரிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 40,35,421ஆக உயர்வு; கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,32,168 ஆக அதிகரிப்பு.
*இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 311 பேர் உயிரிழந்துள்ளனர்- மத்திய சுகாதார அமைச்சகம்.
பாதிப்பு எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் 1,54,330லிருந்து 1,62,379 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884லிருந்து 9,195 ஆக அதிகரிப்பு.
கொரோனா பாதித்த 1,49,348 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தை தாண்டியது, உயிரிழப்பு 400 யை தாண்டியது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,415 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 31,896 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 38 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 435 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 1138 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.
*புதுச்சேரியில் மேலும் 17 பேருக்கு கொரோனா. புதுச்சேரியில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக அதிகரிப்பு.
*தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 6.33 லட்சம் பேர் கைது. ஊரடங்கு விதிமீறல் : ரூ.12.40 கோடி அபராதம் வசூல். 4.69 லட்சம் வாகனங்கள் பறிமுதல். 5.87 லட்சம் வழக்குப்பதிவு.
*கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர். எம்.எல்.ஏ.வின் குடும்பத்தாரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். எம்.எல்.ஏ. பழனியிடமும் தொலைபேசியில் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர்.
*டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை: டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
*கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை: - அமைச்சர் விஜயபாஸ்கர்.
வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது; தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம். கேள்வி கேட்பது சுலபம்;களத்தில் இருந்து போராடும்போது தான் அதன் வலி தெரியும். - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*டெல்லியில் கொரோனா பாதித்தவர் களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததால் 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும்: தனியார் மருத்துவமனைகளில் 60% படுக்கைகள் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். - உள்துறை அமைச்சர் அமித்ஷா.
*கொரோனா புள்ளிவிவரங்களை முழுமையாக தருவது தமிழகம் மட்டுமே:
சென்னையிலிருந்து வந்தாலே கொரோனா தொற்றுடன் வருவார்கள் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
*தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். - வானிலை ஆய்வு மையம்.
*வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த முடிவு:
நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது. - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
*இந்தி நடிகர் தற்கொலை எனத் தகவல்.
மும்பையில், இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தற்கொலை எனத் தகவல்.
”M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை எனத் தகவல்.
*பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, இளம் நடிகர் மிக விரைவில் சென்றுவிட்டார் பொழுது போக்கு உலகில் அவரது வளர்ச்சி பலருக்கு ஊக்கம் அளித்தது - பிரதமர் மோடி.
*புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெறாமல் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
உரிய அனுமதியின்றி 11-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது.
உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக்கல்வித்துறை.
*ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் மரணம்.
54 வயதான செவிலியர் கண்காணிப்பாளர் தொற்று உறுதியான நிலையில் உயிரிழப்பு.
மார்ச் மாதத்தில் முதல்முறை தொற்று ஏற்பட்ட போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். மீண்டும் பணியில் சேர்ந்தவருக்கு இரண்டாவது முறையாக தொற்று பாதிப்பு.
*சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி அளித்த போலியான முகவரி மற்றும் தொலைபேசி எண் பட்டியலை கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
*குஜராத்தில் நிலநடுக்கம் - 5.8 ஆக பதிவு.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கி.மீ தொலைவில் நிலநடுக்கம். ராஜ்கோட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு - தேசிய புவியியல் மையம்.
*கடலூரில் யூ டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த மூன்று பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காடாம்புலீயூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல், சிவப்பிரகாசம், வினோத் ஆகிய மூன்று பேரும் இந்த துப்பாக்கியை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், வேறு யாருக்காவது துப்பாக்கி தயாரித்து கொடுத்துள்ளனரா கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment