அக்னிப்புரட்சி இன்றைய (18.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,92,582 ஆக அதிகரிப்பு.
கொரோனா தொற்றால் இதுவரை 4,50,452 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,
குணமடைந்தோர் எண்ணிக்கை 44,07,778 ஆக உயர்ந்துள்ளது.
*இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 11903ஆக உயர்வு.
24 மணி நேரத்தில் 2015பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவுக்கு 3,67,090 பேர் கொரோனாவால் பாதிப்பு.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1373 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 37,070 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 49 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 625 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 1017 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 28, 641 பேர் குணமடைந்துள்ளனர்.
*இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
பெட்ரோல் 46 காசு உயர்ந்து லிட்டர் ரூ.81.32க்கும், டீசல் 54 காசு உயர்ந்து லிட்டர் ரூ.74.23க்கும் விற்பனை.
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.01 உயர்த்தப்பட்டுள்ளது.
*10,11ஆம் வகுப்பு தேர்வுக்குரிய விடைத்தாள் சேகரிப்பு தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் புதிய உத்தரவு.
விடைத்தாள் சேகரிப்பு, ஒப்படைக்கும் பணிக்கு மாணவர்கள், பெற்றோரை பள்ளிக்கு வரவைக்க கூடாது.
அந்தப் பணிகளுக்கு மாணவர்கள், பெற்றோரை பயன்படுத்தக் கூடாது - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
*கடலூர் மத்திய சிறையில் மூன்று கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை புழலில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட கைதிகள் உட்பட 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
*வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தனியார் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது தவறான தகவல்கள் - தமிழக அரசு. 5 கி.மீ., சுற்றளவு பகுதி எந்த குறைபாடுகள் இல்லாமல் பறவைகள் நிர்வாக பகுதியாகவே இயங்கும் - தமிழக அரசு.
*கொரோனா தொற்று காரணமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் கோரிய அவரது தாயாரின் மனுவை சிறைத்துறை நிராகரிப்பு.
பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரையின்படி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
தமிழகத்திற்கு ரூ.901.75 கோடி ஒதுக்கியது, மத்திய அரசு.
*லடாக்கில் சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரில் உள்ள அவரது சொந்த நிலத்தில் இறுதி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரில் உள்ள சொந்த நிலத்தில் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது அப்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ராணுவத்தினர் இறுதி மரியாதை.
கலந்து கொண்டனர்.
*ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். - அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது.
இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணி நடக்கிறது சூழ்நிலை பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்.
*தற்காலிக மருத்துவ பணியாளர் நியமனத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். - டிடிவி தினகரன்.
*கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உருவப்படத்திற்கு டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.
*முழுபொதுமுடக்கம் சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் முழு பொது முடக்கம் காரணமாக; நாளை முதல் 30ஆம் தேதிவரை மூடல்.
*வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது,
41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்ப்பு- பிரதமர் மோடி.
*முதல்வருக்கு எதிரான மனு - ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றார்.
சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது வழக்கு பதிய கோரிய மனுவை வாபஸ் பெற்றார் ஆர்.எஸ். பாரதி.
பைபர் நெட் டெண்டர் முறைகேடு தொடர்பான மனுவையும் ஆர்.எஸ்.பாரதி திரும்பப் பெற்றார்.
அரசின் விளக்கத்தை அடுத்து மனுக்களை திரும்ப பெற்றதாக ஆர்.எஸ்.பாரதி தகவல்.
ஆர்.எஸ்.பாரதியின் மனுக்களை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
*முழுபொது முடக்கம் அமலாகவுள்ள சென்னை உட்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும். - முதல்வர் பழனிசாமி.
*கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு : அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு.
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என அறிவிப்பு.
வரும் சனிக்கிழமை முதல் 30ம் தேதி வரை கடை திறப்பு நேரம் குறைப்பு.
கொரோனா பரவல் காரணமாக வணிகர்கள், ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு.
*முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.
அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை நடந்து வருகிறது. முதலமைச்சர் அலுவலக தனி செயலாளர் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து அனைவருக்கும் சோதனை.
*சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ஓட்டல்களில் சீன உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
*10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
*இந்திய ராணுவ வீரர்களை எந்த ஆயுதங்களும் இன்றி பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்...?: இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது. - ராகுல் காந்தி.
*உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை:
வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த வருடாந்திர ரத யாத்திரைக்கு தடை.
தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு வழக்கு.
*கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜுன் 30 வரை தடை - தேவஸ்வம் போர்டு.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களில் பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிப்பு.
*சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் நாளைமுதல் முழு முடக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்.
*தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.
கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு.
மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கும் நிலையில் நடவடிக்கை.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் நியமனம்.
திருவள்ளூர் - பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்.காஞ்சிபுரம் - சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் நியமனம்.
கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம்.
*ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். - ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்.
*தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்ல இ-பாஸ் பெறலாம்.
முழுமுடக்கம் அமலாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்ல இணையதளத்தில் இ-பாஸ் பெறலாம்.
tnepass.tnega.org என்ற இணைய தளத்தில் ஆலை ஊழியர்களுக்கான வசதி தொடக்கம்.
*நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்.
ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரிந்தது.
மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம போனால் பரபரப்பு.
*ஆன்-லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.
முதலமைச்சரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு.
ஆன்-லைன் வகுப்புக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது.
மழலையர்களுக்கும் ஆன்-லைன் வழி வகுப்பு நடத்துவது சரியல்ல -கல்வியாளர்கள். தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளது.
*லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன 1996, 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
*10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடரும் சிக்கல்.
பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என தகவல்.
மாற்று ஏற்பாடுகள் செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை.
காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன?
விதிமுறைகள் வெளியிடப்படாததால் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடரும் குழப்பம்.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை பல பள்ளிகள் தற்போது நடத்துவதாக தகவல்.
*கொரோனா சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் தர உத்தரவு. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் ஆணை.
*சென்னை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படாது.
சென்னை பெருநகர் காவல் எல்லை தவிர மற்ற பகுதிகளுக்கு ஏற்கனவே கொடுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது - தமிழக அரசு.
*புதுச்சேரி காவல்துறை, பிற துறைகளில் 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை:
புதுச்சேரியில் கொரோனா தொற்று குறையும் வரை சண்டே மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க முடியாது. - முதல்வர் நாராயணசாமி.
*பாட திட்டங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் ஒப்புதல்-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர் கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
நிலைமை சரியான பின்பு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்.
பணியாளர்கள் சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல அனுமதி இல்லை.
சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும்.
சென்னையை சுற்றி 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதி இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
போலி இ-பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியில் செல்பவர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் - காவல்துறை.
*பொருளாதார இழப்பை சீர்செய்ய மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை,- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன.
6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்றனர்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை.
புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும் என்றார் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
*அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை 20ஆம் தேதிக்குள் ஓப்படைக்க வேண்டும்.
கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த விடுதிக் கட்டிடம் தேவைப்படுகிறது.
கட்டிடத்தை ஒப்படைக்க தவறினால் நடவடிக்கை என சென்னை மாநகராட்சி நோட்டீஸ். விடுதிகளில் உள்ள மாணவர்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவு.
*தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது ஏன்? கொரோனா பரிசோதனை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்.
*இரண்டு நாட்களில் விடுதிகளை ஒப்படைப்பதில் சிக்கல் - அண்ணா பல்கலைக் கழகம்
மாணவர்கள் வெளியூர்களில் தங்கி இருப்பதால் அவர்களின் உடமைகளை எப்படி அப்புறப்படுத்துவது?
சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அண்ணா பல்கலைக் கழகம் கேள்வி.
*நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவு.
No comments:
Post a Comment