இட ஒதுக்கீடு சலுகை அல்ல, உரிமை- 2020 ஆண்டின் மருத்துவ மேற்ப்படிப் பின் அகில இந்திய தொகுப்புக்குரிய 9950 இடங்களில் B.C(MBC+BC)க்கு 371 இடங்கள் ஒதுக்கி இருப்பது வெறும் 3.8% மட்டுமே.இது மிகப்பெரிய சமூக அநீதி.- பாமக தலைவர் ஜி.கே.மணி.
O.B.C க்கு 4 ஆண்டுகள், தொடர்ந்து பாதிப்பு.உரிய இடங்கள் கிடைக்க, மருத்துவர் அன்புமணிM.P அவர்கள் கொடுத்துள்ள பா.ம.க கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
நாட்டின் மக்கள் தொகையில் 60% க்கு அதிகம் உள்ள இதர பிற்பட்ட (M.B.C+B.C) வகுப்பினருக்கு நாடு சுதந்திரம் பெற்று,அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு,பல போராட்டங்கள் நடத்தப்பட்டு, மண்டல் குழு உள்ளிட்ட மத்திய அரசில் பிற்பட்டோர் ஆணையங்கள் அதன் பரிந்துரைகள்,மாநில அரசுகளின் பல ஆணையங்கள் அதன் பரிந்துரைகள் என தொடர்கதையாக காலம் கடந்து 1993ல் OBC க்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மருத்துவர் அய்யா அவர்களின் சீரிய முயற்சியினால் 2006ல் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு 2009ல் முழு அளவில் 27% நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வளவு நடைமுறைக்குப் பிறகும் தற்போது 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மேற்படிப்பு அகில இந்திய தொகுப்புக்குரிய 9,950 இடங்களில் OBC க்கு 371 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.இது வெறும் 3.8% மட்டுமே.இது மிகப்பெரிய மோசடி சமூக அநீதி.
மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இளநிலை மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு இடங்களில் 15% இடங்களையும் முதுநிலை மருத்துவப் படிப்பு (P.G) குரிய இடங்களில் 50% இடங்களையும் அகில இந்திய(மத்திய)தொகுப்புக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இந்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் O.B.C க்கு 27% வழங்கப்படாதது மோசடியை தவிர வேறு என்ன? கைப்புண் பார்க்க கண்ணாடி எதற்கு? என்பது போல் வெட்ட வெளிச்சத்திற்குரியது.
மத்திய அரசுப் பணிகளில் O.B.C க்கு 27% இட ஒதுக்கீடு இருந்தும் குரூப் 1,2,3 பதவிகளில் O.B.C க்கு இதுவரை 5.25%இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.இது அநீதி இல்லையா? மோசடி இல்லையா?
நாடு விடுதலைக்குப் பிறகு 1951ல் செண்பகம் துரைராஜன் வழக்கு மூலம் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது தந்தை பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் முதலமைச்சர் காமராஜர் அவர்களிடத்தில் இந்தப் போராட்டத்தை அடக்க வேண்டுமென்று சொல்ல,உடனே முதல்வர் காமராஜர் இந்தப் போராட்டத்தை அடக்க முற்பட்டால் இது மிகப்பெரிய கிளர்ச்சியாகிவிடும்.முடியாது என்று கூறியுள்ளார்.அதற்கு நேரு அவர்கள் காமராஜரிடத்தில் இதற்கு வேறு வழி என்று கேட்க,உடனே காமராஜர் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவது தான் தீர்வு என சொன்னபிறகு பிரதமர் நேரு அவர்களால் 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலில் இட ஒதுக்கீட்டுக்காக திருத்தப்பட்டது என்பது வரலாறு.
அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 15 ( 4 ) ,16 ( 4 )ஆகிய பிரிவுகளின்படி சமூகத்திலும்,கல்வியிலும் (SOCIALLY AND EDUCATIONALLY) பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு இவ்வளவு காலம் கடந்தும், போதுமான அளவுக்கு இல்லாமல் குறைவாக 27% O.B.C க்கு சட்டமிருந்தும்,அதிலும் மருத்துவ மேற்படிப்பு (P.G)க்கு 9,950 இடங்களில் 3.8% இடங்கள் வழங்கப்படுவதும்,வேலைவாய்ப்பில் குரூப் 1 ,2 ,3 ஆகியவற்றில் O.B.C க்கு 5.25%இடங்கள் மட்டுமே கிடைக்கப் பட்டிருப்பது எவ்வளவு பெரிய அநீதி என்பதை உணர வேண்டும்.பெரும்பான்மை மக்கள் OBC முன்னேறாமல் நாடு எப்படி முன்னேற்றமடையும்.
எனவே மருத்துவ மேற்படிப்பு OBC க்கான 27% இடங்களை வழங்கவேண்டுமென மருத்துவர் அன்புமணிM.P அவர்களின் பா.ம.க கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமாய் வற்புறுத்துகிறோம்.
No comments:
Post a Comment