கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் பேசியது.
கொரோனா பரவலில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று பரவலுக்கு முன்னரே இந்தியா முன்னெச்சரிக் கையாக இருந்தது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு குறு தொழில்கள், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப் பட்டுள்ளன
கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் தற்போது 50-க்கு மேல் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வருவோர் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்- பிரதமர் மோடி.
மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் மோடி அறிவுறுத்தல்.
ஒரு சிலர் அலட்சியப்படுத்தினால் கூட கொரோனாவுக்கு எதிரான போர் பலவீனமாகும்.
மேற்கிந்திய நாடுகளை போல இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் இல்லை. கொரோனா தொடர்பான ஒவ்வொரு உயிரிழப்பும் வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
No comments:
Post a Comment