ஜூன்-21 இன்று உலக யோகா தினம் உடல், உள்ளம் வலிமை பெற யோகா மிக முக்கியம் கொரோனா கால ஊரடங்கில் யோகா செய்தல் நலம் பயக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி. - Agnipuratchi

ஜூன்-21 இன்று உலக யோகா தினம் உடல், உள்ளம் வலிமை பெற யோகா மிக முக்கியம் கொரோனா கால ஊரடங்கில் யோகா செய்தல் நலம் பயக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி.

Share This

ஜூன்-21 இன்று உலக யோகா தினம் உடல், உள்ளம் வலிமை பெற யோகா மிக முக்கியம் கொரோனா கால ஊரடங்கில் யோகா செய்தல் நலம் பயக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி.
  
உடலும் உள்ளமும் வலிமை பெற யோகா மிக மிக அவசியம்.யோகா நமது கலை. இன்று உலகெங்கும் கடைபிடிப்பது நமக்கு பெருமை.
   
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா அவை 2014 ல் ஜூன்-21 உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டு இன்று உலகின் எல்லா நாடுகளிலும் நமது கலையை கடைபிடிப்பது நமக்கு பெருமையளிக்கிறது. உடல் உறுப்புகள் சரிவர இயங்கவும்,ஆரோக்கியமாக வாழவும்,மனம் உளைச்சல் இன்றி குழப்பமில்லாமல் அமைதி ஏற்படவும் யோகா அவசியமானதாகும்.
    
சிறுவர் முதல் முதியோர் வரை யோகா செய்யலாம். பள்ளி_கல்லூரிகளில் யோகா வகுப்பு கட்டாயம் நடத்தப்படவேண்டும்.தொழில் நிறுவனங்கள்,மருத்துவமனைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் பணி செய்வோரிடம் யோகாவை ஊக்கப்படுத்தலாம்.
    
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் சூழலில் உடல் ஆரோக்கியத் திற்கும்,மன அமைதிக்கும் குடும்பத்தில் அனைவரும் மூச்சுப்பயிற்சி,உடற்பயிற்சி, யோகா செய்வது நல்லதே கட்டாயம் பின்பற்றலாம். உடலையும் மனதையும் பாதுகாக்க நோய் வரும்முன் காக்க உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages