அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2020) முக்கிய செய்திகள்
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,44,563ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,37,952ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,70,665ஆக உயர்வு.
*நேற்று ஒரேநாளில் அமெரிக்காவில் 26 ஆயிரம் பேரும், பிரேசிலில் 16 ஆயிரம் பேரும், இந்தியாவில் 15 ஆயிரம் பேரும் கொரோனா தொற்றால் பாதிப்பு.
*இந்தியாவில் கொரோனா தொற்று:
கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக அதிகரிப்பு.
24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 445 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,254லிருந்து 13,699 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் 2,27,756லிருந்து 2,37,196 ஆக உயர்வு.
கொரோனாவால் பாதித்த 1,74,387 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
- மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,487 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 42,752 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 37 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 794 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 34,112 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 27,178 பேர்.- தமிழக சுகாதாரத்துறை
*சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம்.
தமிழகத்தில் இதுவரை 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 1,358 பேர் டிஸ்சார்ஜ்.
கொரோனா நோய் தொற்று எப்போது குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் கூறியதில் தப்பில்லை.
உலக சுகாதார நிறுவனத்திற்கே கொரோனா எப்போது குறையும் என்று தெரியவில்லை.
கண்ணுக்குத் தெரியாத வைரஸை எதிர்த்து முன்கள பணியாளர்கள் போராடுகின்றனர்.
குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். தமிழகத்தில் 55% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,112 பேர் குணமடைந்துள்ளனர்.
*கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுங்கள். - ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தல்.
கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுங்கள். - ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தல்.
*புதுச்சேரியில் நாளை முதல் காலை 6 மணி முதல் அனைத்து கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்து இருக்கும்
பெட்ரோல் பங்குகளும் 2 மணிவரை மட்டுமே திறக்கப்படும். கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்
முக கவசம் அணியால் வெளியே நடமாடினால் 100 ரூபாயிலிருந்து அபராதம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
விவசாய பணிகள், அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவின் படி செயல்படும்
மதுக்கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்
தொழிற்சாலைகளில் 3 மணிவரை அனுமதி அளிக்கப்படும்
உணவங்களில் மதியம் 2 மணிவரை சாப்பிடலாம் பார்சல் இரவு 9 மணி வரை வழங்கலாம்- முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
*சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 29 காசுகள் உயர்ந்து 82.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து 76.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
*கடலூர் மத்திய சிறையில் வேகமாக பரவும் கொரோனா.
கடலூர் மத்திய சிறையில் இன்று மூன்று கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரையில் 10 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம்:
சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம். - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
*இளம்பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்:
கோவையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசாரிடம் வாக்குமூலம்.
தனது மனைவியை அவரது பெற்றோர் வீடு புகுந்து கடத்தி சென்றதாக கணவன் புகார் அளித்த நிலையில் திடீர் திருப்பம்.
தந்தை உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க வந்ததாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் தகவல்.
*முழு முடக்கம் அமலாகியுள்ள 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர் களுக்கு ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம். ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கொரோனா குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர். இன்று முதல் 26-ம் தேதி வரை 21.83 லட்சம் பயனர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரும் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு ரூ.1000 த்தை வழங்குகின்றனர்.
*உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைப்பு - சென்னை உயர்நீதிமன்றம். உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
*ஜம்மு-காஷ்மீர்: நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் மரணம்.
*கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்துக -மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.
மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவு.
*மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு-அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு.
நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் முடிவு.
*திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என அறிவிப்பு. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து; முந்தைய பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிப்பு.
*மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம்.
புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம். மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆக அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை.
தர்மேந்திர பிரதாப் ராமநாதபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமனம்.
*மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு கொரோனா.
ஊழியருக்கு தொற்று உறுதியானதையடுத்து, 3 நாட்களுக்கு அலுவலகம் மூடல். வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
*விமான பயணிக்கு கொரோனா என்றால் என்ன செய்ய வேண்டும்?
விமான பயணத்தின்போது பயணி யாருக்காவது கொரோனா இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொற்று உறுதியான நபர் பயணித்த விமானத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும்.
விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம்.
*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ஆம் தேதி திருச்சி செல்கிறார்.
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்கிறார்.
பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.
*மதுரையில் முழு ஊரடங்கு அமல்!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை போல மதுரை மாவட்டம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 30ந் தேதி வரை முழு பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.
*கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா!
கே.ஆர்.மார்க்கெட், சித்தாபுரா, சிக்பேட் ,வி.வி.புரம், கலாசிபால்யா உள்ளிட்ட இடங்கள் முடக்கப்படு கின்றன! முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு!
*கர்நாடகாவில் அதிக வைரஸ் பாதிப்புக்குள்ளான மாவட்டமாக மாறியது பெங்களூரு. பெங்களூரு நகரில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சிக்பேட், கே.ஆர் மார்கெட் உள்ளிட்ட 30 பகுதிகளில் முழு ஊரடங்கு கர்நாடக அரசு
பெங்களூருவில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதல்வர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரடி முடிவு
*'கர்நாடகாவில் மேலும் 249 பேருக்கு கொரோனா'!
கர்நாடக மாநிலத்தில் மேலும் 249 பேருக்கு கொரோனா தொற்று; இன்று மட்டும்5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,399 பேர் ஆக அதிகரிப்பு; உயிரிழப்பு! இதுவரை 142 பேர் உயிரிழப்பு! சிட்டி மார்க்கெட் - நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மூட மாநில அரசு உத்தரவு!
*ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி 12 நாட்கள் நடைபெறும் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு.
*அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பொதுவார்டுக்கு மாற்றம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பொதுவார்டுக்கு மாற்றம். ஆக்சிஜன் கருவி இல்லாமல் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சுவாசிப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல்.
*கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி அருகே பேருந்தில் சென்ற தம்பதியருக்கு கொரோனா உறுதியானதை அறிந்த சகபயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
*கொரோனா பரிசோதனை செய்துக்கொண்ட தம்பதியர் அரசு பேருந்து ஒன்றில் சென்றபோது செல்போனில் வந்த தகவலை அறிந்த பேருந்து நடத்துனர் உள்பட அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.
*ஹரியானா: உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகளின் படி நோய் கட்டுக்குள் வந்திருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவின் சார்பில் காணொலி மூலமாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர்; 24 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
*புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கிற்கான புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்கள் மூடப்படும். கடைகள், மதுபானக்கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். ஓட்டல்களுக்கு மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். புதிய கட்டுப்பாடுகள் வரும் செவாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளார்.
*அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள் ஒன்றுக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்க முடியும் என்பதால் விவசாயிகள் முற்றுகை.
500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்ததால் அனைவருக்கமு டோக்கன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை
*நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு !
கொரோனா பாதிப்பையடுத்து இன்று ஒருநாள் மகேந்திரகிரி மையம் மூடப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!
*நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைவு!
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து ரூ.3.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.4 ஆக உள்ளது.
*முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல குழுக்களை அமைத்துள்ளது, முதல்வரின் பரிந்துரைப்படி அமைச்சர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்கிறோம் - அமைச்சர் உதயகுமார் பேட்டி
*மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் ரூ.1000!
ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீட்டிற்கே சென்று வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
*சீனாவின் மிரட்டலுக்கு இந்தியா அஞ்சக் கூடாது ; நமது பகுதியை சட்டவிரோதமாக சொந்தம் கொண்டாடுகிறது சீனா
- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்
*இளம்பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்
கோவையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசாரிடம் வாக்குமூலம்
தனது மனைவியை அவரது பெற்றோர் வீடு புகுந்து கடத்தி சென்றதாக கணவன் புகார் அளித்த நிலையில் திடீர் திருப்பம்
தந்தை உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க வந்ததாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் தகவல்.
*மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.840 அடியிலிருந்து 96.210 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60.039 டிஎம்சியாக உள்ளது. பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
*தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2,800 கன அடியாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment