அக்னிப்புரட்சி இன்றைய (23.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்வு.

*இந்தியாவில் கொரோனா தொற்று:
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா கண்டறியப்பட் டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,25,282லிருந்து 4,40,215 ஆக அதிகரிப்பு.

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 312 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.699லிருந்து 14,011 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் 2,37,196லிருந்து 2,48,190 ஆக உயர்வு.

கொரோனாவால் பாதித்த 1,78,014 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,380 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 44,132  ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 39 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 833 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,227 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 35,339 பேர் குணமடைந்துள்ளனர்.

*சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் 5,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு:

ராயபுரம் - 6484, தண்டையார்பேட்டை - 5227, தேனாம்பேட்டை - 5110 பேருக்கு பாதிப்பு.

கோடம்பாக்கம் - 4649, அண்ணா நகர் - 4585, திரு.வி.க. நகர் - 3628 பேருக்கு தொற்று.

அடையாறு - 2531, வளசரவாக்கம் - 1784 பேருக்கு கொரோனா பாதிப்பு.

*ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
புல்வாமாவின் பேண்ட்ஸூ பகுதியில் நடந்த சண்டையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. இரண்டு தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை: போலீசார் தகவல்.

*ஒடிசா: பூரி ஜெகந்நாதர் தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தேர் திருவிழாவுக்கான் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

*ஹெச்1பி, ஹெச் 4 விசா வழங்குவது இந்த ஆண்டு இறுதி வரை ரத்து: டிரம்ப் அறிவிப்பு. வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வசிக்க கிரீன் கார்டு வழங்கும் திட்டம் முடக்கம்.

*மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை.

மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க உள்ளார்.

அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்பு.

கொரோனா பாதிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து மதுரையிலும் நாளை முதல் முழு ஊரடங்கு.

*முதலமைச்சருடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு:

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை என தகவல். கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை என தகவல்.

*இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு அமெரிக்க அரசின் நடவடிக்கை பாகுபாட்டை ஊக்குவிக்கும் செயல் என மத்திய அரசு விமர்சனம்.

*தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு.

மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆர்.எஸ். பாரதி மே 23ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாரதிக்கு ஜூன் 1ம் தேதி ஜாமீன் வழங்கியது அமர்வு நீதிமன்றம்.

அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

*‘பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்’
கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரண மடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். - மு.க.ஸ்டாலின்.

*"கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை"

ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்". மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விளக்கம். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும்".

*ஆன்லைன் கல்வி திட்டம் முறைபடுத்துவதற்கான  விதிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கோள்ளப் பட்டு வருகிறது. பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை 20 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து வருகிறோம்.
- அமைச்சர் செங்கோட்டையன்.

*சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மே மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவு: மே மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 15ந் தேதியுடன் நிறைவு - மின்சார வாரியம்.

*கல்வி கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்..?: - உயர்நீதிமன்றம்.
கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவை தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி.

*"ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவு":
உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல்.
ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

*லடாக் புறப்பட்டார் இந்திய ராணுவ தளபதி  நராவனே:
இந்தியா - சீனா இடையே மோதல் நடைபெற்ற லடாக் எல்லையை பார்வையிட புறப்பட்டார் இந்திய ராணுவ தளபதி  நராவனே.

*முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும்.
மதுரை அம்மா உணவகங்களில் கட்டணமில்லாமல் உணவு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - டிடிவி தினகரன்.

*பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.2 ஆயிரம் கோடியில் 50 ஆயிரம் வெண்டி லேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன; புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - பிரதமர் அலுவலகம். தமிழகத்திற்காக ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்

*தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடை திறக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழந்ததாகக் கூறி சாத்தான்குளத்தில் கடையடைப்பு போராட்டம்.

*மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஏழைகளின் கைகளுக்கு நேரடியாக பணம் செலுத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்துகிறது.
- சோனியா காந்தி.

*லடாக் எல்லை தொடர்பாக சீனா - இந்தியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. - இந்திய ராணுவம்.

மோல்டோவில் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவம் விளக்கம்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 2 ராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு.

2 நாட்டு படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கப்படும். - இந்திய ராணுவம்.

*ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

விரிவான அறிக்கை அளிக்க கண் மருத்துவமனை முதல்வருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் உத்தரவு.

*எல்லையில் வீர‌மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர் மேஜர் அஜய் ரத்தோர் நேரில் ஆறுதல்:

பழனியின் குடும்பத்தினருக்கு ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

*பயோ கேஸ் விற்பனைக்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் 5 சில்லறை விற்பனை நிலையங்கள் திறப்பு:
தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.25 கோடி மதிப்பீட்டில் பயோ கேஸ் உற்பத்தி பணிகளை காணொளியில், முதல்வர் தொடங்கி வைத்தார்.

*சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம். இரண்டு எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்.

*கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியும்?-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா?

கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages