அக்னிப்புரட்சி இன்றைய (25.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகில் 95,20,134 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
உலகில் 4,83,958 பேர் கொரோனா தொற்றால் இதுவரை மரணம்.
உலகில் கொரோனாவில் இருந்து 51,69,213 பேர் குணம் அடைந்தனர்.
உலகிலேயே கொரோனா தொற்றால் அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 124,280 பலி பலி.
அமெரிக்காவில் 24,63,206 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
பிரேசிலில் 11,92,474 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
ரஷ்யாவில் 6,06,881 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
இந்தியாவில் 4,72,985 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
உலகிலேயே நேற்று மிக அதிகபட்சமாக பிரேசிலில் 1,103 பேர் கொரோனாவால் பலி.
அமெரிக்காவில 807 பேரும், மெக்ஸிகோவில 793 பேரும் உயிரிழப்பு.
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 424 பேர் உயிரிழப்பு.
இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,907 ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,56,183லிருந்து 4,73,105 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் 2,58,685லிருந்து 2,71,697 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476லிருந்து 14,894 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதித்த 1,86,514 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு.
கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர்; 13,012 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்- மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,834 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 47,650 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 45 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 911 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,246 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 39,999 பேர் குணமடைந்துள்ளனர்.
*ஆதார் - பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.
2018-19 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காலக்கெடு நீட்டிப்பு.
2019-20 கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு.
*தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது ஸ்டாலின் பழி போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்.
தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா ரூ.1,765+18% ஜிஎஸ்டி வரியுடன் மட்டுமே வாங்கப்பட்டது. வீடுகள் தோறும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என கண்டறியும் திட்டம் உலகிலேயே முதன் முறையாக சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்.
*திருமழிசை சந்தையில் சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருமழிசை காய்கறிச் சந்தையில், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் சாலை அமைக்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, சந்தைக்குள் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றி நிலத்தை சமன்படுத்தி சீர் செய்யும் பணிகளை ஓரிரு நாட்களில் போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்க்கு மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
*சென்னையில் பெட்ரோல் விலை 14 காசு உயர்ந்து ரூ.83,18க்கும், டீசல் விலை 52 காசு உயர்ந்து ரூ.77.29க்கும் விற்பனை.
*தமிழகத்தில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. வேலூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை.
*காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல் விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், காவலர்கள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவு. - டிஜிபி சுற்றறிக்கை.
*கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது:
கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.
கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில கல்வித்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சுமார் இரண்டாயிரத்து 400 மையங்களில் எட்டரை லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக 40 பேர் வரை அமரக்கூடிய தேர்வு அறையில் தற்போது 18 பேர் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு எழுத முடியாத மாணவர்கள், துணைத் தேர்வு எழுதலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
*சென்னையில் 12 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக இதுவரை 6,837 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று
*நாளை முழு கடையடைப்பு.
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு- வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நெல்லையில் அறிவிப்பு.
*கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
ரூ.238.40 கோடியில் நிறைவுற்ற திட்டங்களை காணொலி மூலம் கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர்.
*அரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் - ரெஹனா பாத்திமா மீது வழக்கு.!
கேரளாவின் பெண் சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா அரைநிர்வாணக் கோலத்தில் படுத்திருக்க அவர் உடலில் குழந்தைகள் ஓவியம் வரையும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.
இதையடுத்து சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்தியதாக ரெஹனா பாத்திமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பத்தினம் திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருகின்றனர் .
ஆனால் இந்த வீடியோவை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் என்று ரெஹனா பாத்திமா தெரிவித்துள்ளார். சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா, தற்போது வெளியான வீடியோ மூலம் சட்டச்சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.
*திமுக எம்.பி., கனிமொழி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை திரும்ப பெற்றது காவல்துறை. கொரோனா நோய் தடுப்பு பணிக்காக காவலர்களை திரும்ப பெற்றதாக காவல்துறை விளக்கம்.
*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,944க்கு விற்பனை.
*கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு. சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ராஜாசிங் என்ற விசாரணை கைதி கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதி.
*சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம். உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம்.
சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர், உறவினர்கள்.
காவலர்கள் மீது கொலை வழக்கை அரசு பதிவு செய்யும் என ஜெயராஜின் மகள் நம்பிக்கை.
*பஞ்சாபில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கொலை:
பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் வீட்டு பணிப்பெண் உள்பட ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர். பிரிஜ் லால் (55) அவரது ஒரு மகன், இரண்டு மருமகள்கள், வீட்டுப் பணிப்பெண் என ஐந்து பேரும் வீட்டில் சடலமாகக்கிடந்தனர்.
மிகக் கூர்மையான ஆயுதத்தால், அவர்களது கழுத்து அறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
*ராமநாதபுரம்: விமானப்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் கோவிட் 19 பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது.
*தந்தை,மகன் உயிரிழப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காவல்துறை கனிவாக நடந்து கொண்டு, அன்பை பெற வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. - முதல்வர் பழனிசாமி.
*தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்: - மருத்துவ வணிகர்கள் சங்கம்.
வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு.
*கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை போக்க சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் சேவை மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா.
*நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை:
கொரோனா தொற்று உறுதியான நிலையில் விபரீத முடிவு.
உரிமையாளர் ஹரிசிங் மற்றும் உறவினருக்கு கொரோனா உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்
*சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
*விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
- இஸ்ரோ தலைவர் சிவன்.
*ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம். - தமிழக அரசு.
*ஒரு இரவில் நாடு சிறைச்சாலையானது - உள்துறை அமைச்சர் அமித்ஷா:
45 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஒரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரே இரவில் நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. பத்திரிக்கைகள், நீதிமன்றம், பேச்சு சுதந்திரம் அனைத்தும் முடக்கப்பட்டது. ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டது.
- 1975ம் ஆண்டில் தேசிய அவசரநிலை பிரகடனம் குறித்து உள்துறை அமைச்சர் கருத்து.
*உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு:
விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டதால் தனது கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது.
- கவுசல்யாவின் தந்தை சின்னசாமி.
*பெரம்பலூரில் சாலையில் வீசப்பட்ட பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை மீட்பு: எளம்பலூர் புறவழிச்சாலையோரம் கட்டைப் பையில் பெண் குழந்தை இருந்தது கண்டுபிடிப்பு.
*சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு:
சென்னையில் வீடு வீடாக சென்று அடிப்படை மருத்துவ பரிசோதனை.
நாளொன்றுக்கு 3,500 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு.
சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர்
ஏ.கே.விஸ்வநாதன்.
*மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது.
- நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்.
*புதுச்சேரியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்வு.
*ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது - திமுக தலைவர் ஸ்டாலின்.
கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது ஜனநாயக விரோதம்.
மாநில உரிமைகள் மற்றும் விவசாயிகளின் கடன் பெறும் வசதிகளை பாதுகாக்க இந்த அவசரச் சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ஸ்டாலின்.
*சென்னையில் ஒரே நாளில் 14,000 பரிசோதனை செய்யும் அளவுக்கு கட்டமைப்பு இருப்பது மன நிறைவை அளிக்கிறது. பரிசோதனையை அதிகரித்து கொரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.
*கர்நாடகா: பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
- முதல்வர் எடியூரப்பா.
*முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங் கார் பறிமுதல்:
சென்னையில் ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல்.
காய்கறி வாங்க பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூருக்கு சென்றதால் ராபின்சிங் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
*சிபிஎஸ்இ தேர்வு ரத்து - மத்திய அரசு
சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதி மன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல். மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்து அறிக்கை தாக்கல்.
*ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு:
ஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்க முடிவு! - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
*மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி. - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு ரூ.6,600 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
*மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டனின் (வயது 85) உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்:
சுவாசக் கோளாறு மற்றும் காய்ச்சல் காரணமாக ஜூன் 11ம் தேதி முதல் லக்னோவில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
*ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா?
வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல்.
ஆக.14 ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல்.
*இடி, மின்னல், மழையால் உயிரிழந்த 83 பேருக்கு பிரதமர் இரங்கல்.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் இடி மின்னல், கனமழையால் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
*ஆகஸ்ட் மாதம் வரை ரயில் சேவை ரத்து.- இரயில்வே நிர்வாகம்.
நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆக.12 ஆம் தேதி வரை ரத்து.
எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றின் சேவை ஆக.12 ஆம் தேதி வரை ரத்து என அறிவிப்பு.
நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு.
ஜூலை 1 முதல் ஆக.12 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து.
மெட்ரோ ரயில் சேவைகளை இப்போதைக்கு தொடங்க அனுமதி இல்லை எனவும் ரயில்வே தகவல்.
*எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் காலமானார்.
திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் (72) உடல்நலக்குறைவால் காலமானார்.
திருச்செந்தூர் தொகுதியில் 1984 முதல் 1989 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் சுப்பிரமணிய ஆதித்தன்.
*பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு.
பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்- மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்.
*பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்- முதல்வர் நிதிஷ்குமார் தகவல்.
*திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், தில்லை நகர், உறையூர், கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை.
No comments:
Post a Comment