மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் பல்கலைக் கழக இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற மாணவகள், பெற்றோர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.! - பாமக தலைவர் ஜி.கே.மணி
தற்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் மாணவ மாணவிகள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நெருக்கடி காலமாக உள்ளது. இந்த சூழ்நிலையிலும் இதுவரையிலும் தொடர்ந்து ஊரடங்கில் முடங்கியிருக்கும் நிலையிலும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் மற்றும் பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருவதால் இதை ஏற்று அரசு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment