அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2020) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2020) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2020) முக்கிய செய்திகள்

*உலகளவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 96,99,575 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 52,53,089 ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935 ஆக அதிகரிப்பு.

*இந்தியாவில் கொரோனா தொற்று:
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 17,296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக அதிகரிப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 407 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 ஆக அதிகரிப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் 13,940 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்  குணமடைந்தோர் 2,71,697லிருந்து 2,85,637 ஆக உயர்வு.

கொரோனாவால் பாதித்த 1,89,463 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்  இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 49,690ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 46 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 957 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 41,357 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 32,305 பேர் - தமிழக சுகாதாரத்துறை.

*ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்குகிறது : கோடம்பாக்கம், அண்ணாநகர் உட்பட 4 மண்டலங்களில் பாதிப்பு 5,000 தை  தாண்டியது

சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ எட்டியுள்ளது.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது,

ராயபுரத்தில் 6,951 பேர்,

தண்டையார்பேட்டையில் 5,717 பேர்,

தேனாம்பேட்டையில் 5,534 பேர்,

கோடம்பாக்கத்தில் 5,216 பேர்,

அண்ணாநகரில் 5,260 பேர்,

திருவிக நகரில் 3,981 பேர்,

அடையாறில் 2,922 பேர்,

வளசரவாக்கத்தில் 2,058 பேர்,

திருவொற்றியூரில் 1,787 பேர்,

அம்பத்தூரில் 1,859 பேர்,

மாதவரத்தில் 1,395 பேர்,

ஆலந்தூரில் 1,149 பேர்,

பெருங்குடியில் 928 பேர்,

சோழிங்கநல்லூரில் 984 பேர்,

மணலியில் 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*செங்கல்பட்டில் மேலும் 147 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 4,554 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,554 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

*தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,34,306 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,34,306 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 5,45,763 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 6,73,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ரூ. 15,44,18,285 அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது.

*அண்ணா பல்கலை.யின் அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது.

அண்ணா பல்கலையின் அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அண்ணா பல்கலை. கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மைய பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

*முகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனா வுக்கு தடுப்பு மருந்து - பிரதமர் மோடி

லக்னோ : முகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து
என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், 'கொரோனாவை உத்தரபிரதேச மாநிலம் எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது.உத்தரப் பிரதேச மாநில சாதனைகளை பட்டியலிட்டால் இன்னும் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும் என்றார்.

*தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பணியாளர்கள் 9,319 பேர் மீது வழக்குப் பதிவு - உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்

*நெல்லை 'இருட்டுக் கடை' உரிமையாளர் ஹரிசிங் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது - துணை முதல்வர் பன்னீர் செல்வம்.

சமீப காலத்தில் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்வது மிகுந்த வருத்தமளிக்கிறது.

கொரோனா அச்சமோ, மனஅழுத்தமோ இருந்தால் அரசு உதவி எண் 104-ஐ அழைக்கவும். மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மனஅழுத்தத்தை போக்க உதவுவர் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.

*சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்.
கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும்- வணிகர் சங்க பேரமைப்பு.

*அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம். பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

*புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கொரோனா. புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 533 ஆக அதிகரிப்பு.

*அ.தி.மு.க சார்பில்கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நிவாரணம். கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம். ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் - ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.

*வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை.
வரும் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஆலோசனை. கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தொடர்பாக முக்கிய ஆலோசனை.

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கைது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை மகன்களான வியாபாரிகள் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

*சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்பத்திற்கு திமுக சார்பில்  ரூ.25 லட்சம் நிவாரணம்-திமுக தலைவர்  ஸ்டாலின் அறிவிப்பு. நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என ஸ்டாலின் உறுதி.

*கொரோனாவிலிருந்து காவல், சிறை துறை அதிகாரிகள், கைதிகளை பாதுகாக்கும் விவகாரம்.

முககவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
காவல், சிறைத்துறையினர் மற்றும் கைதிகளுக்கு முககவசம், கையுறை, கிருமி நாசினி வழங்க கோரிய வழக்கில் உத்தரவு.

*டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை.

ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி.

எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.

அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் கேமராக்கள் அமைக்க முடிவு.

*உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல்.

ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் திட்டம்.

சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு  தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண்.

3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண்.

3 பாடங்களுக்கு மட்டும் எழுதியவர்களுக்கு, சிறந்த 2 பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண்.

1 அல்லது 2 பாடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்.

*சென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம்  பீகார்  செல்ல முயன்ற பேருந்து தடுத்து நிறுத்தம்.

வேலூர் அரப்பாக்கம் பகுதி சோதனை சாவடியில் காவல், வருவாய்துறை யினர் நடவடிக்கை. போலி இ பாஸ்  மூலம் செல்ல முயன்ற பேருந்து மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

*தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும். காவல்துறை கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு.

*தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை?
பிளாஸ்டிக் தடை அரசாணையை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது? 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய  தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

*தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் திங்களன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

*இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து. சரக்கு விமான சேவைக்கு தடையில்லை எனவும்  மத்திய அரசு அறிவிப்பு.

*ஓட்டுநருக்கு கொரோனா - பாதி வழியில் இறங்கிய அமைச்சர்.
கார் ஓட்டுநருக்கு கொரோனா உறுதியானதால் பாதி வழியில் இறங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு கொரோனா என தகவல் வந்ததையடுத்து வேறு காரில் சென்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages