27 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்"
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரும் சலோனி குமாரி வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள கோரியும், ஜூலை 8-ஆம் தேதி வரவுள்ள வழக்கு விசாரணையை விரைந்து முன் தேதியிட்டு விசாரிக்கக் கோரியும் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு அரசியல் கட்சிகளின் ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் சலோனி குமாரி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவும் நீதிபதிகள் மனுதார்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அன்புமணி ராமதாஸ், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கிலும் தன்னை இணைத்துக் கொள்ளக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சலோனி குமாரி வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருவதால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment