அக்னிப்புரட்சி இன்றைய (29.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,38,232ஆக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078ஆக உயர்வு.
*இந்தியாவில் அதீத உச்சம் - 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859லிருந்து 5,48,318ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713லிருந்து 3,21,723ஆக உயர்வு.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 380 பேர் கொரோனாவால் மரணம்.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,095லிருந்து 16,475ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்தது.
தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 62 பேர் உயிரிழப்பு. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,141-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2,212 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,749-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,331 - மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை
*பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்: மகன் முரளி கிருஷ்ணா தகவல். பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார் என அவரது மகன் முரளி கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.
*‘சாத்தான்குளம் சம்பவத்தில் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை. தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எம்.பி கனிமொழி தவறான கருத்தை பதிய வைக்க முயற்சிக்கிறார். - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
*ஊழியருக்கு கொரோனா: முதல்வர் நாராயணசாமிக்கு பரிசோதனை.
புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு சோதனை. முதல்வர் உட்பட அவரது வீடு,அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை.
*சாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் - ப.சிதம்பரம். 1996 டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை.
உயிரிழந்த வணிகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் - ப.சிதம்பரம்.
*10ம் வகுப்பு சமூக அறிவியலில் இரண்டு பாடப்புத்தகங்கள் ஒன்றாக இணைப்பு என தகவல்:
வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகம் அமலுக்கு வரும் என தகவல். 11, 12-ஆம் வகுப்பிலும் அதிகமான பாட புத்தகங்கள் ஒரே புத்தகமாக மாற்றம் என தகவல்.
பாட பகுதிகள் கணிசமாக குறைப்பு என்றும் தகவல். வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்ப்பு.
*புதுக்கோட்டையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும்.
ஊரக, நகராட்சி, பேரூராட்சி அமைப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே விழா நடத்த வேண்டும். - ஆட்சியர் உமாமகேஸ்வரி.
*சென்னையில் மீண்டும் ஊரடங்கு?
தளர்வுகள் இல்லா ஊரடங்கு தொடரும் எனத் தகவல்! மருத்துவக் குழு ஆலோசனைக்கு பின் முதல்வர் அறிவிப்பார் எனத் தகவல்!
*புதுச்சேரி: மீனவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதிக்குள் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
தடைக்கால நிவாரணம் தலா ரூ.5,500 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். - மீன்வளத்துறை இயக்குநர்.
*சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவு- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரியை பொறுப்பாக நியமிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
*”விசாரணைக் கைதிகளை குற்றவாளி என்று அழைப்பதே பிழை:
ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர, காவல்துறையின் அதிகாரமன்று - வைரமுத்து.
*ஜூலை 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூலை 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவு!
*சேலத்தில் சுங்கச்சாவடியில் போலீசாரை எட்டி உதைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்பி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அந்த வீடியோவை பார்க்க... https://youtu.be/2m5UAz__CmM
*ஊரடங்கு இல்லை - கட்டுப்பாடுகள் அதி தீவிரம் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அதி தீவிரமாக கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு திட்டம்:
முழு ஊரடங்கு தேவையில்லை என்ற மருத்துவ குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவு என தகவல். பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு.
சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வாரத்தில் அதிக பாதிப்பு. திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சேலம், தேனி மாவட்டங்களிலும் அதிக பாதிப்பு.
*இ-பாஸ் இல்லாமல் கர்நாடகா விலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் உறவினர்கள் கண்காணிப்பு. - சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ்.
*சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் வீடியோ அல்ல:
2019ல் மகாராஷ்ட்ராவில் நடந்த சம்பவ வீடியோவை தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரவுகிறது. வேறு வீடியோக் களை தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்பு படுத்தி பகிர்ந்தால் கடும் நடவடிக்கை.
- சென்னை காவல்துறை.
*ஒருவருக்கு கொரோனா உறுதியானால் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
முடிவு வரும் வரை கொரோனா பரிசோதனை செய்த நபர் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். - பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்.
*‘சாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு மாற்றம்’:
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 27 பேர் புதிதாக நியமனம். - எஸ்.பி அருண்கோபாலன்.
*மதுரையில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,201 ஆக அதிகரிப்பு.
*இரட்டிப்பான கொரோனா பாதிப்பு!!!
பெங்களூருவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி 1,556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி அங்கு மொத்தம் 3,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஒரே வாரத்தில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது
*🪀🪀தேனி மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 656-ஆக உயர்வு
தற்போது வரை ஒரு நாளைக்கு 1200 முதல் 1500 மாதிரிகள் சோதனை.
*🪀🪀ஆரணியில் நேற்று ஒரு பலசரக்கு மளிகை கடையில் பணிபுரிந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது அதன் எதிரொலியாக இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரணியில் முழு கடையடைபு.
*🪀🪀நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது
🪀வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 3 நாட்கள் வங்கி மூடப்படுவதாக அறிவிப்பு
*பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலை அடுத்து அலுவலகத்தில் இருந்த பணியாளர்களை போலீசார் வெளியேற்றினர்.
*சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் ஏகாபுரம் கிராம மோட்டூர் சந்தையன் காடு பகுதியில்
மாது என்ற விவசாயி மாடு ஒன்று 3 கன்றுகுட்டி போட்டுள்ளது அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியாக கன்றுக்குட்டியை பார்த்துச் செல்கின்றனர்.
*உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார் இது சமுதாய பிரச்னை என்பதால் உதயநிதி முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
*இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 58.67 ஆக அதிகரித்துள்ளது
குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்குமான வித்தியாசம் 1,11,602 ஆக உயர்வு - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
*சென்னை: ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் விளக்கத்துடன் எழுத்துப் பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய மனுதாரர், மின்சார வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
No comments:
Post a Comment