உதவி ஆய்வாளை எட்டி உதைத்து, போலீஸுடன் மல்லுக்கு நின்ற முன்னாள் எம்.பி!
பதிலுக்கு போலீசாரும் தள்ளிவிட்டதால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் சுங்கச்சாவடி வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில் ஆவேசமடைந்த கே.அர்ஜுனன் காவலர்களை ஏகவசனத்தில் தரக்குறைவாக பேசினார். உதவி ஆய்வாளரும் அவரை ஒருமையில் திட்டினார். இதனால் சடாரென கோபப்பட்ட கே.அர்ஜுனன் அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரை காரை விட்டு இறங்கி வந்து தாக்க முயன்றார். பதிலுக்கு காவல் உதவி ஆய்வாளர் கே.அர்ஜுனனை தள்ளிவிட்டார். பின்னர் ஆத்திரமடைந்த அவர் காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.
வீடியோ: https://youtu.be/2m5UAz__CmM
No comments:
Post a Comment