அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் களிடம் பேசியதாவது.
கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கொரோனா பரிசோதனை.
கோவை மாவட்டத்தில் 292 பேருக்கு கொரோனா தொற்று, 112 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் குடிமராமத்து பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை.
1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ. 4145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை.
கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தப்படும்.
கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன்.
மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன்.
13 பேர் கொண்ட குழுவின் ஆலோசனை 3 முறை நடந்துள்ளது. தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு. கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை.
கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்.
இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான்.
தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை விடுகிறார்.
இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் வழங்கவில்லை.
அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு நிவாரணம் தந்த எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.
தகுந்த ஆலோசனையின்றி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்.
கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுவது குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.
ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களாகி விட்டது, இந்த 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். 90 நாட்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு பணியாற்றியதால்தான், தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க முடிந்துள்ளது.
அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் பொய்க் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
தினந்தோறும் தவறான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்- முதல்வர் பழனிச்சாமி.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு:
விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
மழைநீரை சேமிக்கும் வகையில் குடிமராமத்து பணிகள் துரிதப்படுத்தும் பட்டுள்ளன.
அறிவிக்கப்படும் திட்டங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறோம்.
அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம். குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்.
திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டம்.
3 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவார்கள். ரூ.1652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்.
முற்றிலும் மாநில அரசின் நிதியில் இருந்து திட்டம் நிறைவேற்றம்.
2021ம் ஆண்டு இறுதிக்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என - முதல்வர் பழனிசாமி பேசினார்.
No comments:
Post a Comment