தமிழகத்தில் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிப்பு.
*மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு.
*சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிப்பு.
*சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்- தமிழக அரசு.
தமிழகம் முழுவதும் ஜுலை 5, 12, 19, 26 ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் - தமிழக அரசு.
*மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமல்.
*கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி.
*பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.
*மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை.
*அரசு, தனியார் பொதுப் பேருந்து போக்குவரத்து ஜூலை 15 வரை நிறுத்தப்படும்- தமிழக அரசு.
*அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
*வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment