அக்னிப்புரட்சி இன்றைய (30.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,04,02,637ஆக உயர்வு.

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56,48,728ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,07,518ஆக உயர்வு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318லிருந்து  5,66,840ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723லிருந்து  3,34,822ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475லிருந்து  16,893ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 2,393 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 58,327 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 60 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 2,325 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 50,074 பேர் குணமடைந்துள்ளனர்.

*சாத்தான்குளம் சம்பவம் - அடுத்த நடவடிக்கை:

தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசியதாக எழுந்த புகார்,  சாத்தான் குளத்தில் பணியாற்றிய காவலர் மஹாராஜன் சஸ்பெண்ட்- தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை.

*ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் 2 பேர் உயிரிழப்பு - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

*திருச்சியில் 80 போலீசார் மீது நடவடிக்கை - திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு:

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை - திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை. அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பு.

நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொது மக்களிடம் வந்த தொடர் புகாரை அடுத்து நடவடிக்கை எனவும் விளக்கம்.
- திருச்சி சரக டிஐஜி.

*வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள்
சாத்தான்குளம் காவல்நிலையம்:

சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம்.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை.

*மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு. லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பெயரால் தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

*தாய் கண்முன் மாணவன் தாக்குதல் -நோட்டிஸ்:
மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் - 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு கோவையில் 10ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் தாக்கிய சம்பவம், 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கோவை காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு. (தாக்குதல் வீடியோ: https://youtu.be/mbNVOn4FxSI )

*சான்று வழங்கிய மருத்துவர் தொடர் விடுப்பு: ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் 15 நாள் விடுப்பில் சென்றுள்ளார்.

சுகாதார துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தகவல். ஏற்கனவே 4 நாள் விடுப்பு எடுத்த நிலையில் 15 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளார் மருத்துவர் விணிலா.

மருத்துவர் விணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ்,  பென்னிக்ஸ் சிறைக்கு அனுப்பபட்டனர்.

*தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. அந்தத் தொகையைப் பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம்.

கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் வழக்கு.

*நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்று விசாரணையை துவக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்குகளை விசாரிப்பவர் அனில்குமார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்க அதிரடி உத்தரவு.

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் அதிரடி. சி.பி.ஐ. விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்பு.

*சேலம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சந்திகர சேகர் சகமுரி நியமனம்:
கடலூர் ஆட்சியராக உள்ள அன்புச்செல்வன் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து புதிய ஆட்சியர் நியமனம்.

*சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு:

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை. பல்வேறு ஆவணங்கள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை என தகவல்.

*🪀🪀வேலூரில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,477ஆக உயர்வு

*🪀🪀புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 714 ஆக உள்ளது

*🪀🪀கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

*கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 135 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் முதல்வர் கூறினார்.

*சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

*விருதுநகர் மகப்பேறு பிரிவில் 14, பெண்களுக்கு கொரோனா
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் மகப்பேறு பிரிவில் மொத்தம் 56, பேர் உள்ள நிலையில் அதில் 14, பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் இல்லாத மற்ற பெண்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்.

*மதுரையில் மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பாதிப்பு எண்ணிக்கை-2552 பேர்.

*சிதம்பரத்தில் பரபரப்பு.....சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 214 பேர் குடும்பங்களுக்கு தனிமைப்படுத்தி ஸ்டிக்கர் ஓட்டினர். வருவாய்த்துறையினர் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை. கோவில் தீட்சிதர்கள் இரண்டு பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்  தனிமைப்படுத்தி நடவடிக்கை.

ஸ்டிக்கர் ஓட்டும் அரசு ஊழியர்களுடன் தீட்சிதர் குடும்பம் கடும் வாக்குவாதம் ஸ்டிக்கர்களை கிழித்தெறிய வலியுறுத்தல். பாசிட்டிவ் கேஸ்வந்து இவ்வளவு நாள் ஏன்? தனிமை படுத்தவில்லை.....?

*தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களான கோவை, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

*ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

*பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் நேற்று இறந்த 12 பேரின் உடல்கள் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

*சென்னையை அடுத்த திருவேற்காட்டில் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகராட்சி ஆணையர், வேலப்பன்சாவடி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். ஆணையருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து திருவேற்காடு நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

*செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்கள், 28 போலீசார் உள்பட 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 5,394 ஆக அதிகரித்துள்ளது. 

*கேரளாவில் இன்று 131 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 4,442ஆக உயர்வு
கேரளாவில் தற்போது 2,112 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்
- கேரளா முதல்வர் பினராயி விஜயன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages