திமுக மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவரான ஜெ.அன்பழகன் பல்வேறு தருணங்களில் என்னை சந்தித்து பேசியுள்ளார். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி கொள்கைகளை பல நேரங்களில் வியந்து பேசியவர். சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் இனைந்து அரசியல் பணியாற்றியவர்; அரசியல் கடந்த நட்பை பராமரித்து வந்தவர்.
ஜெ.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்ட செயலருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழக சட்டப்பேரவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். சிறந்த களப்பணியாளர். என் மீது பற்று கொண்டவர். அரசியலைக் கடந்து என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.
No comments:
Post a Comment